கார், வேன் போன்ற நாற்சக்கர வாகனங்களில் - கதவுகளிலுள்ள கண்ணாடிகளில் - வெயில் வெப்பத்தைத் தவிர்த்திட கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். இந்த ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, இம்மாதம் 01ஆம் தேதி முதல் தமிழகம் முழுக்க காவல்துறையினர் வாகனங்களை நிறுத்தி, அவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் கருப்பு ஸ்டிக்கர்களை அகற்றி வருகின்றனர்.
அந்த அடிப்படையில், காயல்பட்டினம் புறவழிச்சாலையில் - ஆறுமுகநேரி சந்திப்பில், ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபன் தலைமையில் காவல்துறையினர், வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர்களை அகற்றிய காட்சி:-
|