உலக காயல் நல மன்றங்கள், நகர்நல அமைப்புகள் மற்றும் கல்வியார்வலர்களின் அனுசரணையுடன், ஆண்டுதோறும் பட்டப்படிப்பு மற்றும் தொழிற்கல்வி பயிலும் மாணவ-மாணவியருக்கு, உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் - ஆண்டுக்கு ரூ.5,000 வீதம், 3 ஆண்டுகளுக்கு ரூ.15,000 கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் 4 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என, இம்மாதம் 04ஆம் தேதியன்று, காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளிவாசலில், ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியத்தால் நடத்தப்பட்ட விழாவின்போது அறிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில், 4 மாணவர்களின் கல்வி உதவிக்கான முதலாண்டு தொகை 20,000 ரூபாயை, இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மதிடம், ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியத்தின் உள்ளூர் ஒருங்கிணைப்பாளர் தோல்சாப் முஹம்மத் மூஸா நெய்னா வழங்கினார்.
சிங்கப்பூர் காயல் நல மன்ற செயலாளர் மொகுதூம் முஹம்மத், ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்களான வி.எம்.ஏ.மொகுதூம் அமீன், ஏ.டி.ஸூஃபீ இப்றாஹீம், ஆகியோர் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர்.
தகவல்:
தோல்சாப் முஹம்மத் மூஸா நெய்னா. |