முஸ்லிமல்லாத மக்களுக்கு இஸ்லாமிய செய்திகளைக் கொண்டு சேர்த்தல், இஸ்லாமைத் தழுவியோருக்கு தகுந்த வழிகாட்டல் உள்ளிட்ட செயல்திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வரும் காயல்பட்டினம் சமூக நல்லிணக்க மையம் என்ற தஃவா சென்டரின் சார்பில், “முஸ்லிமல்லாத சகோரர்களுக்கு எவ்வாறு தஃவா செய்வது?” என்ற தலைப்பிலான தர்பிய்யா இரண்டாம்கட்ட வகுப்புகள் துவங்கியுள்ளது.
இதுகுறித்து, தஃவா சென்டர் சார்பில் அதன் மேலாளர் டி.வி.எஸ்.ஜக்கரிய்யா வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
நமது தஃவா சென்டர் சார்பாக பிறமத சகோதரர்களுக்கு எவ்வாறு தஃவா செய்வது என்ற தஃவா தர்பிய்யா வகுப்பின் முதல் Batch பல்வேறு அழைப்பாளர்களைக் கொண்டு கடந்த எட்டு மாதங்களாக அழைப்புப்பணியின் பண்முகங்கள் பற்றி வகுப்புகள் வெற்றிகரமாக நடந்து முடிந்ததது அல்ஹம்துலில்லாஹ்.
அதன் தொடர்ச்சியாக Batch-2 தஃவா தர்பிய்யாவின் தொடக்க வகுப்பு ஜூன் 17-ல் ஆரம்பம் செய்யப்பட்டது. இதில் படிக்கும் மாணவர்கள், வேலை பார்ப்பவர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் என பலரும் ஆர்வமுடன் தஃவா செய்திட தர்பிய்யா வகுப்பில் கலந்துள்ளனர்.
வகுப்பு காலை 10மணிக்கு கிராஅத்துடன் ஆரம்பம் செய்யப்பட்டது. பின் தஃவா சென்டர் மேலாளர் ஜக்கரிய்யா அவர்கள் வகுப்பை நடத்தினார்கள். இதில் இஸ்லாத்தின் வளர்ச்சி பற்றிய பாடம் படத்துடன் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சகோதரர் .ஸைபுல்லாஹ் அவர்கள் நாம் ஏன் தஃவா செய்யவேண்டும். தஃவா செய்து இஸ்லாத்திற்கு வந்தவர்களை எவ்வாறு ஒரு முழு முஸ்லிமாக வாழ வைப்பது போன்ற கருத்துகளை மையமாக வைத்து பாடம் நடத்தினார்கள்.
புதிய மாணவர்களுக்கு வழுவூட்டும் வகையில் பழைய மாணவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள்..
இப்பயிற்சியில் கலந்திட்டவர்களுக்கான நேர்முக தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. மாலை 5மணியளவில் WELCOMING RAMALAN ’’ரமலானை வரவேற்ப்போம்’’ என்ற தலைப்பில் சகோதரர். மெளலிவி. ஹாஜா ஃபிர்தெளஸி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
இந்நிகழ்ச்சியை சகோ.48 இப்ராஹிம் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். மேலும் இந்நிகழ்ச்சியை சகோ.அப்துல் காதர் மற்றும் சகோ. அப்துல் பாசித் ஆகியோர் ஒருங்கிணைத்தார்கள்.
1. ALHAMDULILLAH posted byABU AASIYA MARYAM (HONG KONG)[19 June 2012] IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 19463
BISMILLAH.... ASSALAMUALAIKUM WRWB.
MAASHA ALLAH NICE TO C THE GOOD NEWS. "MAY ALMIGHTY ALLAH SHOWERS HIS BLESSINGS UPON DAWAH CENTRE AND THOSE WHO INVOLVED IN THESE NOBLE CAUSE IN BOTH WORLDS"
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross