காயல்பட்டினம் கிழக்குப் பகுதியில், கடற்கரையையொட்டி அமைந்துள்ளது மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை. கடந்த 84 ஆண்டுகளாக வருடந்தோறும் ரஜப் மாதத்தில் அல்ஜாமிஉஸ் ஸஹீஹுல் புகாரீ எனும் நபிமொழிக் கிரந்தம் 30 நாட்கள் முழுமையாக ஓதப்பட்டு, அனுதினமும் ஓதப்படும் பொன்மொழிகளுக்கான விளக்கவுரைகள் மார்க்க அறிஞர்களால் வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பு 85ஆம் ஆண்டு நிகழ்வுகள் 23.05.2012 புதன்கிழமை துவங்கி, இன்று அபூர்வ துஆவுடன் நிறைவுறுகிறது. நாளை 22.06.2012 வெள்ளிக்கிழமையன்று நேர்ச்சை வினியோகம் நடைபெறுகிறது.
இன்று காலையில் ஓதப்படும் நபிமொழிகளுக்கு, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம் மற்றும் முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ விளக்கவுரை வழங்குகிறார்.
அதனைத் தொடர்ந்து, இலங்கை - கொழும்பு சம்மாங்கோட் பள்ளியின் கத்தீப் மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ கூட்டு துஆவின் சிறப்புகள் குறித்து உரையாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து மலையாள மொழியில் உரை இடம்பெறுகிறது. பின்னர், எஸ்.ஏ.காஜா முஹ்யித்தீன் நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றுகிறார்.
மார்க்க சொற்பொழிவுகளைத் தொடர்ந்து கத்முல் புகாரிஷ் ஷரீஃப் எனும் அபூர்வ துஆ பிரார்த்தனை செய்யப்படுகிறது. காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வரும், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ துஆ இறைஞ்சுகிறார்.
இன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தும், மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் www.bukhari-shareef.com என்ற பிரத்தியேக இணையதளத்தில் நேரலை செய்யப்படுகிறது. இந்நேரலையை, காயல்.டி.வி இணையதளத்திலும், புகாரிஷ் ஷரீஃப் சிறப்புப் பக்கத்தில் கேட்கலாம்.
தகவல்:
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் நேரலைக் குழு சார்பாக,
ஜாஃபர் சுலைமான்.
|