இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிறுவனர் காயிதேமில்லத் முஹம்மத் இஸ்மாயில் ஸாஹிப் அவர்களின் பிறந்த தினமான ஜூன் 05ஆம் தேதியன்று, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதர் மன்ஸிலில், முஸ்லிம் லீக் மாணவரணி மன்றும் காயிதேமில்லத் பேரவை சார்பில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சி குறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிறுவனர் காயிதேமில்லத் முஹம்மத் இஸ்மாயில் ஸாஹிப் அவர்களின் பிறந்த தினமான ஜூன் 05ஆம் தேதியை, கல்வி விழிப்புணர்வு தினமாகக் கொண்டாட அக்கட்சி கொள்கை வகுத்துள்ளது.
அதனடிப்படையில், இம்மாதம் 05ஆம் தேதியன்று, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதர் மன்ஸிலில், முஸ்லிம் லீக் மாணவரணி மன்றும் காயிதேமில்லத் பேரவை சார்பில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நகர முஸ்லிம் லீக் தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்ஃபார், எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம், ஹாஃபிழ் எஸ்.எல்.ஷெய்கு அப்துல் காதிர், முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன், கவுரவ ஆலோசகர்களான ஹாஜி எஸ்.டி.கமால், ஹாஜி மொகுதூம் கண்டு ஸாஹிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எஸ்.எம்.தைக்கா உமர் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். காயிதேமில்லத் பேரவை நகர அமைப்பாளர் ஆசிரியர் மு.அப்துல் ரசாக் வரவேற்புரையாற்றியதோடு, நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப், நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ், துணைச் செயலாளர் ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன், காயிதேமில்லத் பேரவை ஹாங்காங் அமைப்பாளர் ஹாஃபிழ் வி.எம்.டி.முஹம்மத் ஹஸன் ஆகியோர் கருத்தரையாற்றினர்.
பின்னர், காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ சிறப்புரையாற்றினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவனர் காயிதேமில்லத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் வாழ்க்கைச் சரிதத்தையும், சமுதாயப் பற்றையும் அவர் தனதுரையில் விளக்கிப் பேசினார்.
முஸ்லிம் லீக் மாணவரணி தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம் நன்றி கூற, தமிழக அரசின் தூத்துக்குடி மாவட்ட காழீயும், மஹ்ழரா அரபிக்கல்லூரியின் துணை முதல்வருமான மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
கூட்டத்தில், ஹாஜி முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்கா, அரபி ஷாஹுல் ஹமீத், ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, ஏ.கே.மஹ்மூத் சுலைமான், எம்.இசட்.சித்தீக், ரிஃபாய், என்.எம்.இஜாஸ், ஹாஜி பிரபுத்தம்பி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |