ஹாங்காங்கில் நடைபெற்ற சேலஞ்ச் லீக் க்ரிக்கெட் சுற்றுப் போட்டியில், காயல்பட்டினத்தின் க்ரிக்கெட் வீரர்களை உள்ளடக்கிய மெட்ராஸ் க்ரிக்கெட் க்ளப் அணி அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று, இறுதிப்போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது. விபரம் பின்வருமாறு:-
ஹாங்காங் க்ரிக்கெட் கழகத்தின் (Hong Kong Cricket Association - HKCA) அங்கீகாரத்துடன், ஹாங்காங்கிலுள்ள தனியார் சுற்றுப்போட்டி ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் கடந்த ஆறு ஆண்டுகளாக சேலஞ்ச் லீக் க்ரிக்கெட் சுற்றுப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
இச்சுற்றுப்போட்டியில், காயல்பட்டினத்தின் க்ரிக்கெட் வீரர்களை உள்ளடக்கிய மெட்ராஸ் க்ரிக்கெட் க்ளப் அணியும் விளையாடி வருகிறது. 15 அணிகளை உள்ளடக்கிய இச்சுற்றுப்போட்டியில், முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் “ஏ” பிரிவில் விளையாடும். அந்த அடிப்படையில், காயல்பட்டினம் நகரின் க்ரிக்கெட் வீரர்களை உள்ளடக்கிய மெட்ராஸ் க்ரிக்கெட் க்ளப் அணி கடந்த மூன்றாண்டுகளாக “ஏ” பிரிவில் விளையாடி வருகிறது.
நடப்பு சுற்றுப்போட்டியில் மெட்ராஸ் க்ரிக்கெட் க்ளப் அணி மொத்தம் 7 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியும். 2 போட்டிகளில் தோல்வியும் பெற்றுள்ளது. ஒரு போட்டி இடைநிறுத்தம் செய்யப்பட்டது. இதன் மூலம் இந்த அணி 4ஆவது தரத்தைப் பெற்றது. இந்த அணியில், காயல்பட்டினத்தைச் சார்ந்த
வாவு யாஸிர் (அணி துணைத்தலைவர்),
ரிஹான்,
அஜ்மல்,
லாஃபிர்,
ஹபீப் (அணி தலைவர்),
வாவு மொகுதூம் (ஹாங்காங்),
மக்பூல்,
முஸ்தாக்,
லியாக்கத்,
ஷம்சுத்தீன். யு.,
பஷீர்
ஆகியோர் விளையாடினர்.
24.06.2012 அன்று, ஹாங்காங் பழைய விமான நிலையம் அருகிலுள்ள கை டாக் மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்த அணி - கடந்த ஆண்டு நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் தன்னைத் தோற்கடித்த ஸ்ரீலங்கன் சோஷியல் க்ரிக்கெட் க்ளப் (SLSCC) அணியை எதிர்த்து ஆடியது.
நாணய சுழற்சியில் வென்ற ஸ்ரீலங்கன் சோஷியல் க்ரிக்கெட் க்ளப் அணி துடுப்பாட்டத்தைத் தேர்ந்தெடுத்தது. 30 ஓவர்களில், 9 வீரர்கள் இழப்பிற்கு அந்த அணி 167 ஓட்டங்களைப் பெற்றது. அடுத்து ஆடிய மெட்ராஸ் க்ரிக்கெட் க்ளப் அணி, 26 ஓவர்களில், 8 வீரர்கள் இழப்பிற்கு 168 ஓட்டங்களைப் பெற்றது. இதன்மூலம், இரண்டு வீரர்கள் இழப்பில் இந்த அணி வெற்றிபெற்று, 01.07.2012 அன்று இதே மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில், TAIPAN CRICKET CLUB -HKG BLUES (TCC - HK BLUES) அணியுடன் விளையாட தகுதி பெற்றுள்ளது.
மெட்ராஸ் க்ரிக்கெட் க்ளப் அணியின்
மக்பூல் 33 ஓட்டங்களையும்,
வாவு மொகுதூம் (ஹாங்காங்) 27 ஓட்டங்களையும்,
யாஸிர் 22 ஓட்டங்களையும்,
அஜ்மல் 20 ஓட்டங்களையும்,
முஸ்தாக் 12 ஓட்டங்களையும் பெற்றனர்.
26 ஓட்டங்களைப் பெற்று, எதிரணியின் 4 வீரர்களையும் ஆட்டமிழக்கச் செய்த மெட்ராஸ் க்ரிக்கெட் க்ளப் அணி வீரர் ரிஹான் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அணிகளின் தர வரிசைப் பட்டியல் பின்வருமாறு:-
கடந்த காலங்களில்,
எஸ்.ஏ.நூஹ்,
நவ்ஃபல்,
நரேஷ்,
மக்பூல்,
முஸ்தாக்,
இஸ்மாஈல்,
வாவு மொகுதூம் (ஹாங்காங்)
ஆகியோர் மெட்ராஸ் க்ரிக்கெட் க்ளப் அணியின் தலைவர்களாகவும்,
செய்யித் அஹ்மத் (கானாப்பா),
செய்யித் (கோமான்),
அர்ஷத்,
நூஹ் (ஜூனியர்),
அஜார்,
வாவு இப்றாஹீம்,
ஷேக்னா. யு.,
மள்ஹர்,
வாவு காக்கா,
வாவு மொகுதூம் (பாங்காக்),
எம்.பி.எஸ்.ஷேக் (பாங்காக்),
கம்ரான்,
ஜெயன்,
ஷாஹுல் ஹமீத்,
ரஷீத்
ஆகியோர் வீரர்களாகவும் விளையாடியுள்ளனர்.
நடப்பு சுற்றுப்போட்டிகளில், மெட்ராஸ் க்ரிக்கெட் அணியின் பங்கேற்புக்கான முழு ஏற்பாடுகளையும், அணித்தலைவர் ஹபீபுடன் இணைந்து வீரர் முஸ்தாக் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தகவல்:
ஹபீப்
அணி தலைவர்,
மெட்ராஸ் க்ரிக்கெட் க்ளப். |