கத்தர் காயல் நல மன்றம் ஏற்பாட்டில், உலக காயல் நல மன்றங்களின் கல்வித் துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளுடன் இணைந்து, காயல்பட்டினம் நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி (Inter-School Quiz Competition) 22.06.2012 வெள்ளிக்கிழமை மதியம் 03.30 மணிக்கு, காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் - கே.எஸ்.ஸி. மைதானத்தில் நடைபெற்றது.
முன்னேற்பாடுகள்:
முன்னதாக, ஓரணிக்கு மூன்று பங்கேற்பாளர்கள் வீதம் ஒரு பள்ளியிலிருந்து (வகுப்பு வேறுபாடுகளின்றி) எத்தனை அணிகள் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம் என்ற விதிமுறையுடன் - இப்போட்டியில் கலந்துகொள்ள விண்ணப்பிக்கக் கோரி அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை மற்றும் விளக்கப் பிரசுரங்கள் வழங்கப்பட்டிருந்தது.
பங்கேற்ற அனைத்துப்பள்ளிகளின் அணிகள்:
அதனடிப்படையில்,
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 33 அணிகளும்,
எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 27 அணிகளும்,
சென்ட்ரல் மேனிலைப்பள்ளியிலிருந்து 20 அணிகளும்,
எல்.கே.மேனிலைப்பள்ளியிலிருந்து 19 அணிகளும்,
சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து 09 அணிகளும்,
அரசு மகளிர் மேனிலைப்பள்ளியிலிருந்து 8 அணிகளும்
என மொத்தம் 127 அணிகள் வினாடி-வினா போட்டியில் பங்கேற்றன. ஓரணிக்கு 3 பங்கேற்பாளர்கள் வீதம், 127 அணிகளின் சார்பில் மொத்தம் 381 பேர் பங்கேற்றனர்.
காயல்பட்டினம் எல்.கே.பள்ளிகளின் ஆட்சிக்குழு உறுப்பினரும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், பள்ளி - கல்லூரிகளில் வினாடி-வினா போட்டி நடத்தியவருமான எல்.டி.இப்றாஹீம் இப்போட்டியை நடத்தினார்.
நுழைவுப் போட்டி:
மாலை 03.30 மணிக்கு நுழைவுத் தேர்வு நடைபெற்றது. ஆங்கில மொழியின் 26 எழுத்துக்கள் விடைகளின் துவக்கத்தில் வரும் வகையில் மொத்தம் 26 கேள்விகள் இந்நுழைவுத் தேர்வில் கேட்கப்பட்டது.
அதிக கேள்விகளுக்கு சரியான விடையளித்த - பின்வரும் முதல் ஆறு அணிகள் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றன.
(1)
எல்.கே.மேனிலைப்பள்ளியின் சார்பில் (11ஆம் வகுப்பைச் சார்ந்த)
எஸ்.ஏ.ஷக்கூர் அஃப்ஸர்,
எஸ்.எம்.எஸ்.மஹ்மூத் சுல்தான்,
எஸ்.ஏ.என்.அப்துல் காதிர் நவ்ஃபல்
ஆகிய மாணவர்களும்,
(2)
எல்.கே.மேனிலைப்பள்ளியின் சார்பில் (12ஆம் வகுப்பைச் சார்ந்த)
எம்.ஏ.எஸ்.காஜா நவாஸ்,
ஆர்.எஸ்.ஸதக்கத்துல்லாஹ்,
கே.எம்.எஸ்.முஹம்மத் அலீ ஸாஹிப்
ஆகிய மாணவர்களும்,
(3)
சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் சார்பில் (10ஆம் வகுப்பைச் சார்ந்த)
எஃப்.ஹரேஷ் ஃபெர்னாண்டோ,
ஏ.அப்துல் அஹத்,
பி.எம்.ஸதக்கத்துல்லாஹ் ஸஃபூஹ்
ஆகிய மாணவர்களும்,
(4) சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் சார்பில் (11ஆம் வகுப்பைச் சார்ந்த)
எஸ்.எம்.எம்.ஸூஃபீ ஹுஸைன்,
எம்.ஏ.சி.அபூபக்கர் பக்ரீன்,
ஏ.அப்துல் ரசாக்
ஆகிய மாணவர்களும்,
(5)
சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் சார்பில் (10ஆம் வகுப்பைச் சார்ந்த)
எஸ்.ஷேக் தாஜுத்தீன்,
எச்.பி.மீரான் ஃபெரோஸ்கான்,
பி.செந்தில் செல்வம்
ஆகிய மாணவர்களும்,
(6)
சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் சார்பில் (10ஆம் வகுப்பைச் சார்ந்த)
ஹாஃபிழ் எஸ்.எம்.பி.அபுல் காஸிம்,
கே.ஹம்ஜத்,
எஸ்.எம்.எஸ்.முஹம்மத் அலீ
ஆகிய மாணவர்கள் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்ற 6 அணிகளின் பங்கேற்பாளர்களாவர்.
இறுதிப் போட்டி:
வினாடி-வினா இறுதிப்போட்டி மேடை நிகழ்ச்சியாக மாலை 04.30 மணிக்குத் துவங்கியது. இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்புகளின் தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், எல்.டி.இப்றாஹீம் போட்டியை நடத்தினார்.
இலங்கை காயல் நல மன்றத்தின் உறுப்பினர் ஹாஜி எஸ்.ஐ.புகாரீ, தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் துணைத்தலைவர் ஹாஜி சாளை ஜியாவுத்தீன், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் உள்ளூர் பிரதிநிதி எஸ்.அப்துல் வாஹித் ஆகியோர் போட்டியின் மதிப்பீட்டாளர்களாக (Scorers) கடமையாற்றினர்.
முதல் மூன்றிடங்களைப் பெற்ற அணிகள்:
5 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியின் இறுதியில்,
எல்.கே.மேனிலைப்பள்ளியின்
எஸ்.ஏ.ஷக்கூர் அஃப்ஸர்,
எஸ்.எம்.எஸ்.மஹ்மூத் சுல்தான்,
எஸ்.ஏ.என்.அப்துல் காதிர் நவ்ஃபல்
ஆகிய மாணவர்களைக் கொண்ட அணி முதல் இடத்தைப் பெற்றது. அந்த அணிக்கு ரூ.5,000 பணப்பரிசும் - சான்றிதழும், முதலிடம் பெற்ற அணியின் பள்ளியான எல்.கே.மேனிலைப்பள்ளிக்கு கோப்பையும் பரிசளிக்கப்பட்டது. பள்ளியின் சார்பில் ஓவிய ஆசிரியர் மணிகண்டன் - வெற்றி பெற்ற அணியினருடன் கோப்பையைப் பெற்றுக்கொண்டார்.
எல்.கே.மேனிலைப்பள்ளியின் பள்ளியின்
எம்.ஏ.எஸ்.காஜா நவாஸ்,
ஆர்.எஸ்.ஸதக்கத்துல்லாஹ்,
கே.எம்.எஸ்.முஹம்மத் அலீ ஸாஹிப்
ஆகிய மாணவர்களைக் கொண்ட அணி இரண்டாமிடத்தைப் பெற்றது. அந்த அணிக்கு, ரூ.3,000 பணப்பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின்
எஸ்.ஷேக் தாஜுத்தீன்,
எச்.பி.மீரான் ஃபெரோஸ்கான்,
பி.செந்தில் செல்வம்
ஆகிய மாணவர்களைக் கொண்ட அணி மூன்றாமிடத்தைப் பெற்றது. அந்த அணிக்கு ரூ.2,000 பணப்பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் சான்றிதழ்:
இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து அணிகளுக்கும் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
வினாடி-வினா போட்டியில் பங்கேற்று, குறைந்தபட்சம் ஒரு கேள்விக்கேனும் சரியான விடையளித்த அனைத்து அணிகளின் மாணவ-மாணவியருக்கும் அவரவர் பள்ளிகளின் மூலமாக சான்றிதழ்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
பார்வையாளர் பரிசுகள்:
போட்டியில், பார்வையாளர் சுற்றில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான விடையளித்த மாணவ-மாணவியருக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டது.
நினைவுப் பரிசு:
பரிசுகளை, இக்ராஃ கல்விச் சங்கத்தின் தலைவரும், தாய்லாந்து காயல் நற்பணி மன்றத்தின் தலைவருமான ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் வழங்கினார். பின்னர், இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தமைக்காக அவருக்கு கத்தர் காயல் நல மன்றம் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. அதனை இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீத் வழங்கினார்.
அதுபோல, வினாடி-வினா போட்டியை நடத்திய எல்.டி.இப்றாஹீமுக்கு இக்ராஃ நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் நினைவுப் பரிசு வழங்கினார்.
ஏற்பாடு:
இப்போட்டியில், நகரின் அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள், பள்ளிகளின் மாணவ-மாணவியர், அவர்கள்தம் பெற்றோர், பள்ளிகளின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள், உலக காயல் நல மன்றங்களின் முன்னாள் - இந்நாள் அங்கத்தினர் ஆகியோர் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.
போட்டி ஏற்பாடுகளை, இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீத், பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், மக்கள் தொடர்பாளர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்பின் அறங்காவலர்களான பி.ஏ.புகாரீ, எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், இக்ராஃ துணைச் செயலாளரும், கத்தர் காயல் நல மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதியுமான எஸ்.கே.ஸாலிஹ் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
இக்ராஃ கல்விச் சங்கம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளுடனிணைந்து கத்தர் காயல் நல மன்றம் நடத்தும் - நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டியில், இதுவரை நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் எல்.கே.மேனிலைப்பள்ளி முதலிடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
படங்களில் உதவி:
வீனஸ் ஸ்டூடியோ.
[செய்தி திருத்தப்பட்டது @ 27.6.2012/6:00pm] |