கத்தர், ரியாத், தம்மாம், ஹாங்காங் காயல் நல மன்றங்கள் இணைந்து, சர்க்கரை நோய் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப் போட்டி மற்றும் பரிசோதனை இலவச முகாம் நிகழ்ச்சிகளை நாளையும், நாளை மறுதினமும் நடத்தவிருக்கின்றன.
இதுகுறித்து, கத்தர் காயல் நல மன்ற தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்பார்ந்த காயலர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சர்க்கரை நோய் குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வூட்டி, பாதுகாப்புணர்வுடன் அவர்களைத் திகழச் செய்திடும் நோக்கோடு, கத்தர் காயல் நல மன்றம், ரியாத் காயல் நற்பணி மன்றம், தம்மாம் காயல் நற்பணி மன்றம் மற்றும் காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை ஹாங்காங் அமைப்புகள் இணைந்து, சர்க்கரை நோய் விழிப்புணர்வு மாரத்தான் - நீள் ஓட்டப் போட்டியையும், சர்க்கரை நோய் பரிசோதனை இலவச முகாமையும் நடத்தவுள்ளன.
மாரத்தான் - நீள் ஓட்டப் போட்டி:
மாரத்தான் நீள் ஓட்டப் போட்டி, 01.07.2012 ஞாயிற்றுக்கிழமையன்று (நாளை) காலை 08.00 மணிக்கு காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கம் - ஐசிஐசிஐ வங்கி முனையில் துவங்கி, நகரின் பல்வேறு வீதிகள் வழியாக கடற்கரையில் நிறைவடையும்.
இப்போட்டியை, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் துவக்கி வைப்பதோடு, போட்டிகளில் வென்றோருக்கு கடற்கரையில் பரிசுகளையும் வழங்கவிருக்கிறார்.
போட்டி குறித்த முழு விபரம் பின்வருமாறு:-
சர்க்கரை நோய் பரிசோதனை இலவச முகாம்:
மறுநாள் 02.07.2012 திங்கட்கிழமையன்று காலை 09.00 மணி முதல், நண்பகல் 12.00 மணி வரை, சர்க்கரை நோய் பரிசோதனை இலவச முகாம், காயல்பட்டினம் ரிஸ்வான் சங்கம், பெரிய சதுக்கை, இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது.
முகாம் குறித்த முழு விபரம் பின்வருமாறு:-
சர்க்கரை நோய் பரிசோதனை இலவச முகாமில் கலந்துகொள்ள வருவோர், குறைந்தபட்சம் 12 மணி நேரத்திற்கு, தண்ணீரைத் தவிர எதையும் பருகாமலும், உணவுண்ணாமலும் வர வேண்டியது அவசியமாகும்.
மாரத்தான் போட்டி மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை இலவச முகாம் விபரங்கள் அடங்கிய பிரசுரங்கள், நகரின் மூன்று ஜும்ஆ பள்ளிகளிலும், அனைத்து ஆண்கள் பள்ளிக்கூடங்களிலும் நேற்றும் இன்றும் வினியோகிக்கப்பட்டுள்ளது.
பிரசுரம் கிடைக்காதவர்கள், காயல்பட்டினம் கலாமீஸ் குளோத்திங், முர்ஷித் டிஜிட்டல் ஜெராக்ஸ், மன்னர் ஜுவல்லர்ஸ் நிறுவனங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு, கத்தர் காயல் நல மன்றத் தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
S.K.ஸாலிஹ்,
உள்ளூர் பிரதிநிதி,
காயல் நல மன்றம், கத்தர். |