காயல்பட்டினம் நகராட்சி சேவைகளில் பொதுமக்களுக்குள்ள நியாயமான குறைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் அவற்றை சரிசெய்திடும் பொருட்டு, மாதந்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டுமென கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதியன்று நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்றக் கூட்டத்தில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா முன்மொழிய தீர்மானமியற்றப்பட்டது.
அதனடிப்படையில், மாதந்தோறும் கடைசி புதன்கிழமைகளில் இக்கூட்டம் தொடர்ச்சியாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, அதன்படி நடைபெற்று வருகிறது.
நடப்பு ஜூன் மாதத்திற்கான (ஐந்தாவது) கூட்டம், 27.06.2012 புதன்கிழமையன்று மதியம் 03.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை காயல்பட்டினம் நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது.
கட்டிட அனுமதிக்கான (ப்ளான் அப்ரூவல்) விண்ணப்பக் குறைபாடுகளை முன்னிறுத்தி நடத்தப்பட்ட இக்கூட்டத்தில், மொத்தம் 8 மனுக்கள் மூலம் 9 கோரிக்கைகள் பெறப்பட்டன. கட்டிட அனுமதி (ப்ளான் அப்ரூவல்) குறைபாடுகளை முன்னிறுத்தும் 4 கோரிக்கைகளும், வீடு புள்ளி மாற்றல் தொடர்பாக 1 கோரிக்கையும், குடிநீர் வினியோகம் தொடர்பாக 2 கோரிக்கைகளும், தெரு விளக்கு தொடர்பாக 1 கோரிக்கையும், இதர சேவைக் குறைபாடுகளை முன்னிறுத்தி 1 கோரிக்கையும் பெறப்பட்டது.
நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகளைப் பெற்றுக்கொண்டார். நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெ.அந்தோணி, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் ஆகியோர் விண்ணப்பங்களை ஒருங்கிணைத்தனர்.
பின்னர் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் கருத்து தெரிவிக்கையில்,
புதிதாக கட்டிடம் கட்ட விரும்பும் பொதுமக்கள் தமது முறைப்படியும், சட்டப்பூர்வமாகவும் தமது கட்டிடத்தைக் கட்டுவதாக இருப்பின், கட்டிட அனுமதி (ப்ளான் அப்ரூவல்) கோரி சரியான ஆவணங்களுடன் நகராட்சி ஆணையருக்கு விண்ணப்பிக்க வேண்டும்... விண்ணப்பம் பெறப்பட்டதிலிருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பம் ஏற்கப்பட்டதாகவோ, மறுக்கப்பட்டதாகவோ ஆணையர் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்....
அவ்வாறு அவர் தெரிவிக்காத நிலையில், இதுபோன்று (மனு மாதிரி கீழே தரப்பட்டுள்ளது.) ஒரு மனு எழுதி நகர்மன்றத்திற்கு (Council) சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பித்த தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் நகர்மன்றமும் முடிவைத் தெரிவிக்காவிட்டால், தானாகவே அம்மனு ஏற்கப்பட்டதாகக் கருதி தமது கட்டிடப் பணியைத் துவக்கலாம்... இது பொதுமக்கள் நலன் கருதி அரசு வழங்கியிருக்கும் அரியதொரு வாய்ப்பு.
பொதுமக்கள் தமது கட்டிடங்களைக் கட்டுவதற்கான முறைப்படியான ஆவணங்களுடன் இவ்வாறு செய்தால் வீணான அலைச்சலைத் தவிர்த்துக்கொள்ளலாம்...
இவ்வாறு நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தெரிவித்தார்.
நகராட்சி ஆணையரிடமிருந்து பதில் பெறப்படாத கட்டிட அனுமதி விண்ணப்பம் குறித்து நகர்மன்றத்திற்கு முறையிடுவதற்கான மாதிரி விண்ணப்பம் பின்வருமாறு:-
இதுகுறித்த அரசாணை பின்வருமாறு:-
|