சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் குடும்ப சங்கம நிகழ்ச்சி, 30.06.2012 அன்று நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் கலந்துகொள்ள மன்ற உறுப்பினர்கள் மற்றும் சிங்கைவாழ் காயலர்களுக்கு அழைப்பு விடுத்து, அம்மன்றத்தின் செயலாளர் மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்பின் மன்ற உறுப்பினர்கள் மற்றும் சிங்கப்பூர் வாழ் காயலர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹ்...
இன்ஷாஅல்லாஹ், எதிர்வரும் 30.06.2012 சனிக்கிழமையன்று மாலை 05.00 மணியளவில், நமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் காயலர் குடும்ப சங்கம நிகழ்ச்சியை, சிங்கப்பூர் பொட்டானிக் கார்டன்ஸ்-இல் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
அன்று மாலை 05.30 மணிக்கு நிகழ்வுகள் துவங்கி, இரவு 07.15 மணிக்கு நிறைவுறும். நிகழ்ச்சி நிரல் அனைத்து உறுப்பிர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
மன்றத்தின் நகர்நலப் பணிகளை இன்னும் மெருகூட்டும் வகையில், நல்ல பல ஆலோசனைகளுடன் - குறித்த நேரத்தில் நிகழ்விடம் வந்தடையுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
MRTயில் பயணித்து கூட்டத்திற்கு வர விரும்பும் அன்பர்கள், Botanic Gardens ஸ்டேஷனில் இறங்கி, 'A' Exit வழியாக, மிக அருகிலிருக்கும் பொட்டானிக் கார்டன்ஸ் நுழைவாயிலை (Bukit Timah) வந்தடையலாம்.
பேருந்தில் பயணித்து நிகழ்விடம் வர விரும்பும் அன்பர்கள், Bukit Timah Road வழித்தடத்தில் செல்லும் பேருந்தில் ஏறி, Botanic Gardens நிறுத்தத்தில் இறங்கி, Bukit Timah நுழைவாயில் வழியாக கூட்ட நிகழ்விடமான பொட்டானிக் கார்டன்ஸ்-ஐ வந்தடையலாம்.
மாலை 05.00 மணிக்கே பொட்டானிக் கார்டனுக்கு வந்து, அங்குள்ள வரைபடத்தில் - கூட்ட நிகழ்விடமான Eco Lake via Eco Garden என்ற இடத்தை அறிந்து வருகை தர கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
குழந்தைகளுடன் வருகை தரும் குடும்பத்தினர், இரவு 07.00 மணி வரை திறந்திருக்கும் Jacab Ballas Childran's Gardenக்குச் சென்று மழலையர் மனதைக் குளிர்விக்கலாம்.
குறித்த நேரத்தில் தாங்கள் யாவரும் நிகழ்விடத்தை வந்தடைவீர்களென ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
குடும்ப சங்கம நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும், இரவு உணவு விருந்துபசரிப்பு செய்யப்படவுள்ளது என்பதை மகிழ்வுடன் அறியத்தருகிறோம்.
கடைசி நேர சிரமங்களைத் தவிர்த்திடும் வகையில், இப்போதே உங்களின் பயண ஏற்பாட்டை ஒழுங்கு செய்து திட்டமிட்டுக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம், நன்றி.
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்ற செயலாளர் மொகுதூம் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
[செய்தி திருத்தப்பட்டது @ 12:35/28.06.2012] |