காயல்பட்டினம் நகராட்சி சேவைகளில் பொதுமக்களுக்குள்ள நியாயமான குறைகளைக் கேட்டறிந்து உடனுக்குடன் அவற்றை சரிசெய்திடும் பொருட்டு, மாதந்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டுமென கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதியன்று நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்றக் கூட்டத்தில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா முன்மொழிய தீர்மானமியற்றப்பட்டது.
அதனடிப்படையில், மாதந்தோறும் கடைசி புதன்கிழமைகளில் இக்கூட்டம் தொடர்ச்சியாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, அதன்படி நடைபெற்று வருகிறது.
நடப்பு ஜூன் மாதத்திற்கான (ஐந்தாவது) கூட்டம், 27.06.2012 புதன்கிழமையன்று மதியம் 03.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை காயல்பட்டினம் நகராட்சி கூட்டரங்கில் நடைபெறுகிறது. கட்டிட அனுமதிக்கான (ப்ளான் அப்ரூவல்) விண்ணப்பக் குறைபாடுகளை முன்னிறுத்தி இக்கூட்டம் நடத்தப்படுவதாகவும், இதர சேவைக் குறைபாடுகள் குறித்தும் இக்கூட்டத்தில் மனு அளிக்கலாம் என்றும் காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது:-
|