காயல்பட்டினம் கிழக்குப் பகுதியில், கடற்கரையையொட்டி அமைந்துள்ளது மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை. கடந்த 84 ஆண்டுகளாக வருடந்தோறும் ரஜப் மாதத்தில் அல்ஜாமிஉஸ் ஸஹீஹுல் புகாரீ எனும் நபிமொழிக் கிரந்தம் 30 நாட்கள் முழுமையாக ஓதப்பட்டு, அனுதினமும் ஓதப்படும் பொன்மொழிகளுக்கான விளக்கவுரைகள் மார்க்க அறிஞர்களால் வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பு 85ஆம் ஆண்டு நிகழ்வுகள் 23.05.2012 புதன்கிழமை துவங்கி, 21.06.2012 அன்று அபூர்வ துஆவுடன் நிறைவுற்றது. மறுநாள் 22.06.2012 வெள்ளிக்கிழமையன்று காலையில் நேர்ச்சை வினியோகம் நடைபெற்றது.
ஆண்டுதோறும் புகாரிஷ் ஷரீஃப் நிகழ்ச்சிகள் துவங்குவதையொட்டியும், நிறைவடைவதை ஒட்டியும் ராத்திபத்துல் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸ் நடத்தப்படுவது வழமை. அந்த அடிப்படையில், நடப்பாண்டு நிகழ்ச்சிகள், வைபவம் தொடர்பான அனைத்துப் பணிகளும் நிறைவடைவதையொட்டி, 24.06.2012 ஞாயிற்றுக்கிழமை இரவு மஃரிப் தொழுகைக்குப் பின் ராத்திபத்துல் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸ் நடைபெற்றது.
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் துணைத்தலைவர் ஹாஜி டி.எம்.கே.சுல்தான் அப்துல் காதிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ வழிநடத்தினார். இலங்கை - கொழும்பு சம்மாங்கோட் பள்ளியின் கத்தீப் மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
முன்னதாக, ஸபையில் எஞ்சிய பொருட்களை ஏலம் விடும் நிகழ்ச்சி அன்று மாலை 05.00 மணிக்கு, ஸபை கணக்கர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் தலைமையில் நடைபெற்றது.
தகவல்:
ஜாஃபர் சுலைமான்.
|