காயல்பட்டினம் கோமான் தெருவில், இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம், 24.06.2012 ஞாயிற்றுக்கிழமை இரவு 08.00 மணிக்கு, கோமான் ஜமாஅத் முன்னாள் தலைவர் முஹ்யித்தீன் அடிமை தலைமையில் நடைபெற்றது. கோமான் மொட்டையார் பள்ளியின் தலைவர் இஸ்மாஈல், செயலாளர் ஃபாரூக், பள்ளியின் முன்னாள் பொருளாளர் தாஹிர், ஹாஜி அஹ்மத் மீரான், ஐக்கிய சமாதானப் பேரவை சென்னை மாநகர அமைப்பாளர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ, அதன் அலுவலக மேலாளர் எம்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவர் ஆஷிக் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி தலைவர் ஜுவெல் ஜங்ஷன் கே.அப்துர்ரஹ்மான் வரவேற்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, “அண்ணல் நபியின் இறுதிப் பேருரை” என்ற தலைப்பில், ஐக்கிய சமாதானப் பேரவை தலைவர் மவ்லவீ என்.ஹாமித் பக்ரீ மன்பஈ சிறப்புரையாற்றினார்.
கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியின் இமாம் ஹாஃபிழ் கத்தீப் ரஹ்மத்துல்லாஹ் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், கோமான் ஜமாஅத்தைச் சார்ந்த ஆண்களும், பெண்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
முன்னதாக, கோமான் ஜமாஅத்தைச் சார்ந்த சிறுவர்-சிறுமியரின் பல்சுவை சன்மார்க்க நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. கூட்ட ஏற்பாடுகளை கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியின் பொருளாளர் கோமான் மீரான் செய்திருந்தார். |