தூத்துக்குடி மாவட்டத்தில், கேபிள் டிவி கட்டணமாக - சந்தாதாரர்கள் மாதம் ரூ.70 மட்டுமே செலுத்துமாறு மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கை பின்வருமாறு:-
தூத்துக்குடி மாவட்டத்தில், கேபிள் டிவி கட்டணமாக, தமிழ்நாடு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட தொகை ரூபாய் 70 (எழுபது மட்டும்) மாதந்தோறும் செலுத்திட அனைத்து சந்தாதாரர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அதிக கட்டணம் வசூல் செய்யும் கேபிள் டிவி ஆப்பரேட்டர் குறித்த விபரத்தினை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குத் தகவல் தெரிவிக்கும்படி அறிவிக்கப்படுகிறது.
சந்தாதாரர்களிடம் வசூலிக்கப்படும் கேபிள் டிவி கட்டணத் தொகைக்கு, வசூலிக்கப்படும் அட்டையில் மாதம் / கட்டணம் / கையொப்பம் ஆகியவற்றை கண்டிப்பாக பதிவு செய்து, கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் கொடுக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்படுகிறது.
1. Re:கேபிள் டிவி கட்டணமாக மாதம... posted byceylon fancy kazhi. (Jeddah)[25 June 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19607
ரூபாய் 140 /= 150 /= என்று மாத கட்டணமாக வாங்கிய கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கேல்லாம் இனி ஆப்பு தான் .சரி அடுத்து என்ன செய்யலாம் என்று ரூம் போட்டு யோசியுங்க !!!.
2. இவர்கள் வசதிக்கு கேட்கும் பணத்தை நாம் கொடுக்க முன் வரவில்லை என்பதால் நமது இணைப்பை துண்டிக்க நினைக்கலாம்...! மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டியது தான் வேற வழி..? posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். ( காயல்)[25 June 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 19611
தமிழ்நாடு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட தொகை ரூபாய் 70 (எழுபது மட்டும்) மாதந்தோறும் செலுத்திட அனைத்து சந்தாதாரர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அடடா... இது தெரியாமலா இத்தனை மாதம் அதிக பணம் குடுத்து ஏமாந்தோம்... சரி சரி மாவட்ட ஆட்சியரின் அதிகார பூர்வ செய்தி தகவல் இந்த இணைய தளம் மூலம் நம் கவனத்துக்கு வந்து விட்டது... மிக்க நன்றி..! இனி வீடு தேடி அதிக பணம் கேட்டு வசூலுக்கு இனி வரட்டும் பார்க்கலாம்..
காயல் மக்களே... உசார்.. உசார்... மாதம் மாதம் இனி ஏமாந்தது போதும்...! அதிக கட்டணம் வசூல் செய்யும் கேபிள் டிவி ஆப்பரேட்டர் குறித்த விபரத்தினை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குத் தகவல் தெரிவிக்கும்படியும் அறிவிக்கப்பட்டு இருக்கு..! கேபிள் டிவி ஆப்பரேட்டர் இவர்கள் வசதிக்கு கேட்கும் பணத்தை நாம் கொடுக்க முன் வரவில்லை என்பதால் நமது இணைப்பை துண்டிக்க நினைக்கலாம்...! மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டியது தான் வேற வழி..? இது போதும்...
இந்த செய்தியை நெட்டில் போட்டமைக்காக இந்த இணையதளத்தின் மேல் கேபிள் டிவி ஆப்பரேட்டர் இவர்கள் கோபம் கொள்ளலாம்..! காண்டாக இருக்கலாம்...! மக்கள் விழிப்புணர்வு அடைய பெரும் பங்களிப்பு செய்த.. ஊர் மக்களுக்கு மிக பரவலாக இந்த செய்தி போய் சேர காரணமாக இருந்த இந்த இணைய தளத்திற்கு மிக்க நன்றி. நன்றி...
நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.
உறுப்பினர் - வி சி கட்சி.
3. Re:கேபிள் டிவி கட்டணமாக மாதம... posted byM.S.ABDULAZEEZ (Guangzhou)[25 June 2012] IP: 14.*.*.* China | Comment Reference Number: 19613
நண்பன் முத்து இஸ்மாயில் கருத்து சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது. அப்பிடி இருந்தால் நண்பர் சொல்வது போன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக தொடர்பு நம்பர் மற்றும் தகவல் முகவரி தெரிவித்தால் நம் மக்களுக்கு உதவியாக இருக்கும் (அட்மின் அவர்கள் )
Moderator: எழுத்துப்பூர்வமாக அளிக்கும் தகவல்களுக்குத்தான் பெரும்பாலும் அரசு அலுவலகங்களில் மதிப்பளிக்கப்படும்.
4. Re:கேபிள் டிவி கட்டணமாக மாதம... posted bysyedahmed (GZ, China)[26 June 2012] IP: 119.*.*.* China | Comment Reference Number: 19616
கலெக்டர் அவர்களின் இந்த துரித நடவடிக்கை மிகவும்
வரவேற்க்கத்தக்கது. சரியான கட்டணம் இதுதான் என்று வெட்ட வெளிச்சமாகி விட்டது. இனி மக்கள் தெளிவாகி விட்டர்ர்கள். சரியான ஆப்பு.
5. Re:கேபிள் டிவி கட்டணமாக மாதம... posted bysoofi hussain (jeddah)[26 June 2012] IP: 62.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19619
70 ரூபாய்க்கு எப்போதும் போல எல்லா சேனலும் (pay சேனலான - ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஈஸ்ப்ன், Neo கிரிக்கெட், செட் மாக்ஸ்) பார்க்க முடியுமா. இல்ல ப்ரீ சேனல் (மக்கள் டிவி, வின் டிவி, சன் டிவி ... ) மட்டும் பார்க்க முடியுமா?
6. Re:கேபிள் டிவி கட்டணமாக மாதம... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (காயல்பட்டினம் )[26 June 2012] IP: 59.*.*.* India | Comment Reference Number: 19621
அப்பப்பா... நம் நாட்டில் ஏறின விலைவாசி இறங்கியதாக சரித்திரம் இல்லை.
விலை ஏறி இறங்கி, உயர்ந்து குறைந்தது முன்பு 'உப்பு' ஒன்று தான். இப்போது குறைந்து இருப்பது கேபிள் டிவி கட்டணம் மட்டும் தான் என்று நினைக்கிறேன். உங்களுக்கு வேறு தெரிந்தால் சொல்லுங்களேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross