அடுத்த மாதம் துவங்கவுள்ள ரமழான் நோன்பு பருவத்தை முன்னிட்டு, நோன்பு கஞ்சி தயாரிப்பிற்காக செலவு அனுசரணை கோரி, காயல்பட்டினம் காட்டுத் தைக்கா அரூஸிய்யா பள்ளி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதன் வாசகங்கள் பின்வருமாறு:-
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நமது பள்ளியின் ரமழான் தராவீஹ் மற்றும் கஞ்சி வினியோகம் செய்ய நிர்வாகக் குழு கூட்டம் கடந்த 15.05.2012 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில், காட்டுத் தைக்கா அரூஸிய்யா பள்ளியின் புதிய கட்டிடத்தில், தலைவர் ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் சுல்தான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில், வழமை போல் இவ்வாண்டும் (1433 - 2012) புனித ரமழானில் நம் பள்ளியில் தராவீஹ் தொழுகை நடத்தவும், இஃப்தார் கஞ்சி வினியோகம் செய்யவும் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டு, அதற்கான குழுவும் பின்வருமாறு தெரிவு செய்யப்பட்டுள்ளது:-
ஜனாப் ஹாஜி ஜே.எம்.காதர் அவர்கள்
ஜனாப் ஹாஜி ஏ.ஷாஹுல் ஹமீத் அவர்கள்
ஜனாப் ஹாஜி எஸ்.எம்.பி.மூஸா நெய்னா அவர்கள்
ஜனாப் ஹாஜி முஹம்மத் சுல்தான் அவர்கள்.
கஞ்சிக்கான ஒருநாள் செலவு விபரம்:
கறி கஞ்சி - ரூ.6,500.00
காய்கறி கஞ்சி - ரூ.5,500.00
வெண்கஞ்சி - ரூ.4,500.00
எனவே, குறைந்தபட்சம் ஒருநாள் செலவினத்திற்குப் பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு நம் ஜமாஅத் பொதுமக்கள் மற்றும் நகர பொதுமக்களை அன்புடன் வேண்டுகிறோம்.
தாங்கள் அளிக்கும் அனுசரணைத் தொகையை,
ஜனாப் எஸ்.எம்.பி.மூஸா நெய்னா அவர்கள்,
செயலாளர்,
காட்டு தைக்கா அரூஸிய்யா பள்ளி,
1-ஏ, காட்டு தைக்கா தெரு,
காயல்பட்டினம் - 628 204
என்ற முகவரிக்கு ஏற்பாடு செய்து தரும்படி அன்புடன் வேண்டுகிறோம்.
எல்லாம்வல்ல அல்லாஹ் எதிர்வரும் சங்கை மிகு ரமழானில் நமது நாட்ட தேட்டங்களை நிறைவேற்றி, ஈருலக பாக்கியங்களையும் தந்தருள்வானாக, ஆமீன்.
குறிப்பு:
(1) அனுசரணையளிக்க விரும்பும் அன்பர்கள் இச்செய்தியின் கமெண்ட்ஸ் பகுதியில் தமது முகவரி அல்லது தொலைபேசி எண்ணைத் தெரிவித்தால் கூட நாங்களே அங்கு சென்று பெற்றுக்கொள்கிறோம்.
(2) தாங்கள் செலுத்தும் பணத்திற்கு முறைப்படி நன்கொடை ரசீது வழங்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு, காட்டுத் தைக்கா அரூஸிய்யா பள்ளியின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. |