இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறையழைப்பை ஏற்று விண்ணுலகப் பயணம் மேற்கொண்டதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ரஜப் மாதம் 27ஆம் நாளில் காயல்பட்டினத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழமை.
அந்த அடிப்படையில், காயல்பட்டினம் புதுப்பள்ளி சதுக்கையில் அமைந்துள்ள ரிஸ்வான் சங்கம் சார்பில், மிஃராஜ் தின சிறப்பு நிகழ்ச்சி, 17.06.2012 அன்று நடைபெற்றது. அன்றிரவு 07.00 மணிக்கு புதுப்பள்ளி வளாகத்தில், ஹாஃபிழ் பாளையம் முஹம்மத் லெப்பை தலைமையில் மிஃராஜ் மவ்லித் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, இரவு 08.30 மணியளவில், புதுப்பள்ளி வளாகத்திலுள்ள ரிஸ்வான் சங்க சதுக்கையில், பாளையம் மஹ்மூத் சுலைமான் லெப்பை ஆலிம் திடலில் மிஃராஜ் சிறப்புரை நடைபெற்றது.
புதுப்பள்ளி துணைத்தலைவர் ஹாஜி எஸ்.எஸ்.எம்.புகாரீ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ”வேந்தர் நபியின் விண்ணுலகப் பயணம்” என்ற தலைப்பில், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனர் மற்றும் இயக்குநருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ சிறப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, மேலப்பள்ளி மற்றும் புதுப்பள்ளி இமாம்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.
நிறைவாக, புதுப்பள்ளியின் இமாம் ஹாஃபிழ் செய்யித் நூஹ் அவர்களின் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியில் நகரின் பல பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் நேர்ச்சை வினியோகிக்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, உமர் ஒலி, எம்.எஸ்.ஸதக்கத்துல்லாஹ் ஆகியோர் ஒருங்கிணைப்பில், ரிஸ்வான் சங்க அங்கத்தினர் செய்திருந்தனர்.
தகவல்:
பல்லாக் அப்துல் காதிர் நெய்னா.
படங்கள்:
மாஸ்டர் கம்ப்யூட்டர் அகடமி மூலமாக
இம்ரான் உஸைர். |