புன்னைக்காயலில் நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட அளவிலான கால்பந்து சுற்றுப்போட்டியில், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணி இறுதிப்போட்டியில் வென்று சுழற்கோப்பையைத் தட்டிச் சென்றுள்ளது. விபரம் பின்வருமாறு:-
அமரர் மனுவேல்ராஜ் பிஞ்ஞேயிரா நினைவு வெள்ளி சுழற்கோப்பைக்கான - மாவட்ட அளவிலான 39ஆவது கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி 16.06.2012 அன்று துவங்கி, 27.06.2012 புதன்கிழமையன்று நிறைவுற்றது.
சவுத் கோஸ்ட் கால்பந்துக் கழகம் - தூத்துக்குடி,
காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) - காயல்பட்டினம்,
புனித வளன் கால்பந்துக் கழகம் - புன்னைக்காயல்,
சிகால் கால்பந்துக் கழகம் - தூத்துக்குடி,
செல்வம் சாஸர் - தூத்துக்குடி,
பட்டணம் இளைஞர் மன்றம் - வீரபாண்டியன் பட்டணம்,
மர்காஷியஸ் கால்பந்துக் கழகம் - நாசரேத்,
ஓ.எல்.ஃபாத்திமா கால்பந்துக் கழகம் - தூத்துக்குடி,
ஸ்ப்ரிட்டெட் யூத் கால்பந்துக் கழகம் - தூத்துக்குடி,
ஐக்கிய விளையாட்டு சங்கம் (யு.எஸ்.ஸி.) - காயல்பட்டினம்,
ப்ரெண்ட்ஸ் கால்பந்துக் கழகம் - தூத்துக்குடி,
டி.சி.டபிள்யு. கால்பந்துக் கழகம் - சாகுபுரம்
ஆகிய 12 அணிகள் மோதிய இப்போட்டியில், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணியும், வீரபாண்டியன் பட்டணம் இளைஞர் மன்ற அணியும் இறுதிப்போட்டியில் களம் கண்டன. இப்போட்டியில், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், தூத்துக்குடி மாவட்ட கால்பந்துக் கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் ரோட்ரிகோ, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் ஹாஜி பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை, அதன் செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இரண்டாமிடத்தைப் பெற்ற வீரபாண்டியன் பட்டணம் இளைஞர் மன்ற அணிக்கான கோப்பையையும், வீரர்களுக்கான தனிப்பரிசுகளையும், இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திருச்செந்தூர் வட்டாட்சியர் வள்ளிக்கண்ணன் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, வெற்றிபெற்ற காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணிக்கான சுழற்கோப்பையையும், இதர பரிசுகளையும் தூத்துக்குடி மாவட்ட கால்பந்துக் கழக செயலாளர் சேஷய்யா வல்லவராயர் வழங்கினார்.
பின்னர், காயல்பட்டினம் டாஸ் ஹோம் ஸ்டைல் நிறுவனத்தின் சார்பில் அதன் உரிமையாளர் நவ்ஃபல் சிறந்த வீரர்களுக்கான பரிசுகளுக்கு அனுசரணையளித்தமைக்காக, விழாவில் கவுரவிக்கப்பட்டார்.
3 வீரர்களுக்கு வழங்கப்பட்ட அப்பரிசுகளில் ஒன்றை, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணி வீரர் புகாரீ - சிறந்த ஆட்டக்காரருக்கான பரிசாக பெற்றுக்கொண்டார்.
இச்சுற்றுப்போட்டிகள் அனைத்திலும், கால்பந்துப் போட்டி நடுவர்களுக்கான இரண்டாம் தர (Class 2) பயிற்சி பெற்றுள்ள - காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க வீரர்களான பி.ஏ.முஹம்மத் இஸ்மாஈல் மற்றும் எல்.கே.மேனிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் எல்.ஜமால் முஹம்மத் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றிமை குறிப்பிடத்தக்கது.
படங்கள்:
மாஸ்டர் கம்ப்யூட்டர் அகடமி மூலமாக
இம்ரான் உஸைர். |