சர்க்கரை நோய் குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வூட்டி, பாதுகாப்புணர்வுடன் அவர்களைத் திகழச் செய்திடும் நோக்கோடு, கத்தர் காயல் நல மன்றம், ரியாத் காயல் நற்பணி மன்றம், தம்மாம் காயல் நற்பணி மன்றம் மற்றும் காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை ஹாங்காங் அமைப்புகள் இணைந்து, சர்க்கரை நோய் விழிப்புணர்வு மாரத்தான் - நீள் ஓட்டப் போட்டியை 01.07.2012 ஞாயிற்றுக்கிழமையன்று நடத்தின.
அதனைத் தொடர்ந்து, இதே அமைப்புகளின் சார்பில் 02.07.2012 திங்கட்கிழமை காலை 08.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, காயல்பட்டினம் புதுப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ரிஸ்வான் சங்கம், அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் அமைந்துள்ள பெரிய சதுக்கை, ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் அமைந்துள்ள இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) ஆகிய மூன்று இடங்களில் சர்க்கரை நோய் பரிசோதனை இலவச முகாம் நடத்தப்பட்டது.
ஓமன் நாட்டில் மருத்துவப் பணியாற்றும் டாக்டர் எஸ்.ஏ.கே.நூருத்தீன் தலைமையில், காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையின் ஆய்வக பரிசோதகர் ராஜா ஹுஸைன், மருத்துவக் கல்லூரி மாணவர் ஃபஸல் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் இம்முகாம்களில் பங்கேற்று, பொதுமக்களுக்கு சர்க்கரை நோய் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
ரிஸ்வான் சங்கத்தில் 186 பேரும், பெரிய சதுக்கையில் 304 பேரும், இளைஞர் ஐக்கிய முன்னணியில் 225 பேரும் என மொத்தம் 715 பேர் சர்க்கரை நோய் பரிசோதனை செய்துகொண்டனர்.
முகாம் ஏற்பாடுகளை, கத்தர் காயல் நல மன்ற தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் தலைமையில், தம்மாம் காயல் நற்பணி மன்ற துணைத்தலைவர் சாளை ஜியாவுத்தீன், அதன் முன்னாள் துணைத்தலைவர் ஹாஜி எம்.ஐ.மெஹர் அலீ, ரியாத் காயல் நற்பணி மன்ற செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லாஹ், ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா, கலாமீ யாஸர், எம்.எல்.ஹாரூன் ரஷீத், ஏ.எஸ்.புகாரீ, எம்.சதக், எம்.ஏ.புகாரி (48), எம்.எஸ்.ஸதக்கத்துல்லாஹ், எம்.ஐ.ஃபைஸல், மற்றும் உறுப்பினர்கள், அல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற செயலாளர் முஹம்மத் முஹ்யித்தீன் மற்றும் உறுப்பினர்கள், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர் எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, இளைஞர் ஐக்கிய முன்னணியின் செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் சாளை நவாஸ், வட அமெரிக்க காயல் நல மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி உ.ம.ஷாஹுல் ஹமீத், கத்தர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர்களான ஹாஃபிழ் ஏ.எச்.ஹபீப் முஹம்மத் நஸ்ருத்தீன், ஃபைஸல் ரஹ்மான், அதன் உள்ளூர் பிரதிநிதி எஸ்.கே.ஸாலிஹ் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
படங்கள்:
சாளை ஜியாவுத்தீன். |