'TOWARDS CORRUPTION-FREE KAYAL' - “ஊழலற்ற காயலை நோக்கி” என்ற தலைப்பில், இம்மாதம் 15ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10.00 மணியளவில் காயல்பட்டினம் - இரத்தினபுரி - ஏ.கே.எம். நகரில் அமைந்துள்ள துளிர் கேளரங்கில் மாபெரும் கருத்தரங்கம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இக்கருத்தரங்கில், தமிழகத்தின் புகழ்பெற்ற ஊழல் எதிர்ப்பு சமூக ஆர்வலர் அறிஞர்கள் பங்கேற்று அரிய பல கருத்துக்களை வழங்கவுள்ளனர்.
இதுகுறித்து, இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
கருத்தரங்க ஏற்பாடுகளை, காயல்பட்டினம் தைக்கா தெருவைச் சார்ந்த உமர் ஒலி தலைமையில் குழுவினர் செய்து வருகின்றனர்.
2. Re:ஜூலை 15 அன்று “ஊழலற்ற காய... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். ( காயல் - 97152 25227)[06 July 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 19868
நல்ல அருமையான கருத்தரங்கம்... இப்போதைய காலத்தின் கட்டாய கருத்தரங்கம்... கருத்தரங்கம் மிக சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்... கருத்தரங்கம் நடை பெரும் இடம் மிக தூரமாக உள்ளத்தால் மக்கள் வர ஆர்வம் காட்டுவது சிலரே...
3. Re:ஜூலை 15 அன்று “ஊழலற்ற காய... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (காயல்பட்டினம்)[06 July 2012] IP: 59.*.*.* India | Comment Reference Number: 19872
வெல்டன்... கண்டிப்பாக ஊழல் அற்ற காயல் உருவாகும். இன்ஷா அல்லாஹ்.
இந்த புனித பாதைக்கு பாடு படும் அனைவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ஆக மொத்தம், ஊரில் பல இடங்களில், பல பல வழிகளில் ஆப்பு கூர் தீட்டி வைக்கப்பட்டுள்ளது. அமர்பவர்கள் பார்த்து அமருங்கள். அப்புறம் ஆப்பு அடித்து விட்டார்கள் என்று அடுத்தவர்களை குறை கூறி புலம்ப வேண்டாம்.
4. கருத்தரங்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள் posted bySaalai.Abdul Razzaq Lukman (Kayalpatnam)[06 July 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 19874
அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்த கருத்தரங்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள். இதன் மூலம் நம் நகராட்சி மட்டுமல்லாது தமிழகத்திலும் லஞ்சம் / ஊழல் வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழிய சீரிய கருத்துக்கள் பொதுமக்களாகிய நமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை எழுகிறது. ஆனால் நம்மில் பல பேர் நமது வேலை சீக்கிரம் (out of turn) முடிய வேண்டும் என்ற ஆவலில் லஞ்சம் கொடுக்க தயார் ஆகிறோம். இந்த சிந்தனை முதலில் நம்மிடமிருந்து களைய பட வேண்டும். நம்முடைய முறை வரும் வரை காத்திருக்க நம் மனதை பக்குவபடுத்திக் கொள்ள வேண்டும்.
நம்முடைய முறையில் (turn) நம் வேலை முடிவதற்கு யாரவது லஞ்சம் / அன்பளிப்பு கேட்டால் அதற்காக RTI அல்லது சட்ட ரீதியாக அந்த வேலை கிடைக்க போராட வேண்டும். நாம் லஞ்சம் கொடுத்து நம்முடைய காரியங்கள் முடிய துணை போகாவிட்டால் இந்த லஞ்சத்தை பாதி குறைத்திடலாம். இக்கருத்தரங்கின் மூலமாக நாம் லஞ்சம் கொடுத்து நம்முடைய காரியங்களை முடிக்க மாட்டேன் என்று சூளுரை எடுப்போம்.
6. Re:ஜூலை 15 அன்று “ஊழலற்ற காய... posted byKader K.M (Dubai)[07 July 2012] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19881
நல்லதொரு முயற்சி! கர்த்தரங்கமும் வெற்றி அடைந்து அதை நாம் நம் வாழ்விலும் பின்பற்ற வல்ல இறைவன் நமக்கு மன உதிப்பை தருவானாக ஆமீன்! இக்கருத்தரங்கம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை விளம்பரங்கள் மூலமாக தெரியப்படுத்த வேண்டும்!
கலந்துகொண்டவர்கள் இறுதிவரை பங்கு கொள்ள இறுதியில் கேட்கப்படும் இரண்டு கேள்விகளுக்கு சன்மானமும் அளிக்கலாம்!
குறிப்பு; இரண்டு சன்மானமும் கருத்தரங்கம் ஏற்ப்பாட்டாளார்கள் அனுமதி அளித்தால் நமது ஊரில் இயங்கிவரும் கோல்டன் ஆட்டோமொபைல்ஸ்&வாட்டர் சர்விஸ் வழங்க தயாராய் உள்ளது!
7. Re:ஜூலை 15 அன்று “ஊழலற்ற காய... posted byM.S.Kaja Mahlari (Singapore)[07 July 2012] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 19889
" தனது வேலை, சம்பந்தமாக அரசு அலுவலகம் சென்ற ஒருவர் அரசு அதிகாரி ஒருவரிடம் சார்! இந்த வேலையை எனக்கு முடித்து தாருங்கள் என்றார். அந்த அதிகாரியோ ,இந்த வேலையை முடித்து தர எவ்வளவு லஞ்சம் தருவீர்கள் என கேட்டார். இவர் எதுவும் தர மாட்டேன் என கோபமாக "லஞ்சம் ஒழிப்பு துறை" அதிகாரிகளிடம் சென்று முறையிட்டார் . அனைத்தையும் அமைதியாக கேட்ட அந்த அதிகாரியோ சரி! நான் இதனை கவனிக்கிறேன் எனக்கு எவ்வளவு லஞ்சம் தருவீர்கள் என்றாராம் ! இப்படிதான் வட்டியை நாம் விட்டாலும் அது நம்மை விடாது. ஊழலை நாம் விட்டாலும் அது நம்மை விடாது போலும்! ஆகவே! அதனை எதிர்த்து நாம் குரல் கொடுப்பதோடு அதனை நாமும் செயல் படுத்திட அல்லாஹ் நல்லருள் புரிவானாக !
8. Re:ஜூலை 15 அன்று “ஊழலற்ற காய... posted bySEYED ALI (ABUDHABI)[07 July 2012] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19890
நம்மில் அநேகருக்கு ஊழல் என்றால் என்னவென்றே தெரியாது.காசுக்கு ஓட்டு போடுவது,காசுகொடுத்து தங்கள் காரியங்களை சாதித்துக்கொள்வது,இதெல்லாம் ஜனநாயகத்தில் சகஜம் தான் என்றும்,அரசியல் சாணக்கியத்தனம் என்றும் நம்புபவர்கள் தமிழ்நாடு முழுவதும் இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம் ஆனால் நம்மூரிலும் படித்த பணக்கார வி ஐ பி களிலிருந்து பாமரர்கள் வரை இவற்றை ஊழல் என்று யார் சொன்னது,அவர் ஆட்சியில் செய்ததுதானே இவர் செய்கிறார் என்று வக்கனை பேசுபவர்கள்தான் அதிகம் என்பது வேதனை.கருத்தரங்கம் ஆக்கபூர்வமாக அமைய இறைவனிடம் வேண்டுகிறேன்.இதன் பிறகாவது மாறுவார்களா நம் மண்ணின் மைந்தர்கள்.பொறுத்திருந்து பார்ப்போம்
9. Re:ஜூலை 15 அன்று “ஊழலற்ற காய... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[07 July 2012] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19891
அஸ்ஸலாமு அலைக்கும்
அப்பாடா....... நாம் இதைதானே ரொம்ப நாளாக எதிர் நோக்கி காத்து இருந்தோம்...............இந்த ஏற்பாடு நல்லதோர் நம் ஊர் மக்களிடமும் & நம் நகர உறுப்பினர் அவர்களிடமும் கண்டிப்பாக ஒரு மாற்றம் ( விழிப்புணர்வு ) தரும்.என்று நினைகிறேன்.
எது எப்படி போனாலும் சரி ....... நம் ஊருக்கு நல்லது நடந்தால் நமக்கு மகிழ்சியே.................
நமது நகராச்சில் ஊழல் அற்ற நிர்வாகம் தேவை. இது தான் மக்களாகிய நம் எண்ணமும் + வேண்டு கோளும் கூட......போன 5 வருடம் ரொம்பவும் நொந்து போய் விட்டார்கள் நம் ஊர் மக்கள் .இந்த 5 வருடமாவது நல்லது நடக்காதா..... என்று நம் ஊர் மக்கள் தவித்து போய் உள்ளார்கள்.
நம் முத்து இஸ்மாயில் காக்கா சொன்னது போல் ஊர் மத்தியில் வைத்து இருந்தால் மிக சிறப்பாக இருந்து இருக்கும்.உங்களுக்கு மேலும் பொது மக்கள் மத்தியில் கடுமையான நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கும் அல்லவா.......
யா அல்லா நாங்கள் “ஊழலற்ற காயலை தான் எதிர் நோக்கி” காத்து இருக்கிறோம். நீ தான் சிறப்பாகி வைக்கணும்.
ஆம்மா....இந்த கூட்டத்துக்கு """ தமிழகத்தின் புகழ்பெற்ற ஊழல் எதிர்ப்பு சமூக ஆர்வலர் அறிஞர்கள் பங்கேற்று அரிய பல கருத்துக்களை தருவது ..... சரி தான் ...... முக்கியமாக நம் நகர் மன்ற உறுப்பினர் அவர்கள் வாருவார்களாமா....? இந்த ஒலி நாடாவில் உரையாடிய அந்த நகர் மன்ற உறுப்பினர் அவர்கள் தான் கண்டிப்பாக வரணும்? ஆமாப்பா.... இவர்கள் எங்கே வர போகிறார்கள் என்று யாரோ கேலியாக சிரிப்பது போன்று என் காதில் விழுகிறது ........
இந்த புதியதோர் நல்ல முயற்சி செய்த. ஜனாப் உமர் காக்கா அவர்களின் இந்த முயற்சி வெற்றியடைய நமது நல் வாழ்த்துகள்.......
>>>>.. உங்களின் இந்த கலை எடுப்புக்கான வேட்டை தொடரட்டும்>>>>>>>>>>>>>நம் நகர் மன்றம் """சுத்தம் ""ஆனால் சரி தான்......
வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA
10. Re:ஜூலை 15 அன்று “ஊழலற்ற காய... posted bynizam (kayal)[08 July 2012] IP: 115.*.*.* India | Comment Reference Number: 19894
உமர் ஒழி காக்காவின் பழைய ஒட்டக சின்னம் நினைவிற்கு வருகிறது. நல்ல முயற்சி இது இயக்கமாக மாற வாழ்த்துக்கள். அண்ணா ஹஜாரே இயக்கத்தில் இருந்து யாராவது கலந்து கொள்கிறார்களா என்பது ஆவல்.
11. Re:ஜூலை 15 அன்று “ஊழலற்ற காய... posted bySalai Sheikh Saleem (Dubai)[08 July 2012] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19897
மிகவும் சரியான நேரத்தில்தான் இந்த கருத்தரங்கம் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கே சகோதரர்கள் இக்கருத்தரங்கத்தின் இட மாற்றத்திற்காக கருத்துப் பதிவு செய்தது போலே, நானும் என் அருமை ஓமர் அலி அப்பாவிடம் (இப்படித்தான் நாங்கள் அவரை அழைப்பது) தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியபோது, அவர் சொன்ன பதில்களில் நிஜத்தின் பிரதிபலிப்பு
" இந்த கருத்தரங்கம் ஊரின் நலன் கருதியே அதுவும் நமது ஊருக்குள்ளேயே நடப்பதால், ஊர் நலம் விரும்பும் நல்லோர்கள் இந்த தூரத்தை கணக்கில் எடுக்க மாட்டார்கள்"
"இந்த கருத்தரங்கத்தை ஊரின் மத்தியில் நடாத்தவேண்டும் என்றால், கூட்டம் மற்றும் எற்பாடுகளுக்கே கிட்டத்தட்ட முப்பதினாயிரம் ரூபாய் வரை செலவாகிறது, அதற்காக நாங்கள் யாரிடத்திலும் வசூலிற்க்காக நிற்க விருப்பமில்லை"
இதுமட்டும் இல்லை, இன்னும் பல ஆப்புக்கள் தயாராகிக் கொண்டிருப்பதாக தகவல் அறிந்த பல வட்டாரங்கள் கூறுகின்றன.
14. Re:ஜூலை 15 அன்று “ஊழலற்ற காய... posted bySalai.Mohamed Mohideen (USA)[09 July 2012] IP: 205.*.*.* United States | Comment Reference Number: 19914
லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளது. இதுதான் மாற்றத்தின் துவக்கம் என்பதோ!!.
இதனை அல்லது இது போன்று எத்தனை 'ஆப்பு' என்பீர்களோ அல்லது எப்படி வேண்டுமென்றாலும் அழைத்து கொள்ளுங்கள். நமக்கு வேண்டியது ஊழலை ஒழித்து தூய நகராட்சி மட்டுமன்றி எல்லா அரசு துறைகளிலும் ஊழல் ஒழிக்கப்பட்டு நமதூர் மக்கள் வளமுடனும் நலமுடனும் வாழ ஒரு வழி வேண்டும்.... அவ்வளவுதான் !!
தனி நபர் முதல் அமைப்புகள் வரை ஒவ்வொருவரும் சமுதாய முன்னேற்றத்திற்காக தேவையான மாற்றத்திற்காக பாடுபடவேண்டும். ஊழலை முழுமையாக ஒழிக்க வேண்டுமென்றால் ஊழல் வாதிகளை அடையாளம் காட்டி அப்புறப்படுத்துவதொடு மட்டுமில்லாமல் அதற்க்கு பொது மக்களாகிய நாம் ஒவ்வொருவரும் தன் சுய நலன்களுக்காக வேண்டி அதற்க்கு துணை போக கூடாது.
நகர்மன்ற உறுப்பினர்கள், ஊழல் வாதிகளை ஊக்குவிக்கும் 'பொழுது போக்கு' அன்பர்கள், அரசாங்க அலுவலர்கள், பெரியவர்கள், தன்னார்வ அமைப்புகள் /இயக்கங்கள் & பொது மக்கள் என அனைத்து தரப்பினரையும் அழைத்து ஒட்டு மொத்த சமுதாயத்திற்க்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
ஊழல் என்பது நகராட்ச்சி உறுப்பினர்கள்/ அலுவலர்களிடத்தில் மட்டுமில்லாது அனைத்து அரசு துறையிலும் (ex : சார் பதிவாளர் அலுவலகம்) களைய படவேண்டும்.
இணைய தளத்தில் மட்டுமல்லாது இதனை உள்ளூர் தொலைகாட்சிகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்யுங்கள். இது இவ்விடயத்திட்க்கு மட்டுமன்றி நகர்மன்ற (மாதாந்திர) சாதா அல்லது ஸ்பெஷல் கூட்டங்களுக்கும் பொருந்தும் (இன்டர்நெட்டையே நகர்மன்ற கூட்டத்திலிருந்து ஒழிக்கலாம் என்று பார்த்தால் இதிலே உள்ளூர் தொலைகாட்சி நேரடி ஒளிபரப்பு வேறா என்று ஒரு சில நகர்மன்ற உறுப்பினர்கள் புறுமுறுப்பதை நம்மால் கேட்க்க/உணர முடிகின்றது). ஏனென்றால் இணைய தளவாசிகள் மட்டும் விழிப்புணர்வு பெற்றால் போதாது. ஊரில் உள்ள ஒவ்வொருவரும் விழிப்புணர்வு பெற வேண்டும் !! அப்பொழுது தான் ஊழல் எண்ணங்கள் தடைகள் முற்றிலுமாக ஒழிக்க பட்டு வளமான காயலை உருவாக்க முடியும் !!
ஊழல்களின் வகைகள் (Types of Corruption) நான்கு தலைப்புகளில் பல உட்கிளைகளாக அமைகிறது.
சார்புடைமை (Favoritism ) - இதன் கிளைகள்: உறவினர்களுக்கு சலுகை (Nepotism), துதிபாடிகளுக்கு சலுகை (Cronyism), பாகுபாடு காட்டல் (Discrimination) மற்றும் வேண்டாதவர் என்று கருதப்படுவோரின் உரிமையை மறுத்தல் (Prejudice).
கப்பம் (Tribute) - இதன் கிளைகள்: லஞ்சம வாங்குதல் (Commissions), பணியாற்றும் அல்லது சேவையாற்றும் இடத்தில் பெறும் தொடர் லஞ்சம் (Tapping), கையூட்டு(Bribes), மிரட்டிப் பறித்தல் (Extortions) மற்றும் சட்டப்படி பாதுகாப்பு வழங்க, நியாயமின்றி கையூட்டுப் பெறுதல்(Protection).
அதிகாரம் (Authority) - இதன் கிளைகள்: சலுகை துஷ்பிரயோகம் (Privilege), அதிகார துஷ்பிரயோகம் (Abuse), ஒப்பந்த துஷ்பிரயோகம் (Contract), மோசடியாகப் பணப் பதுக்கல் (Embezzlement) மற்றும் தொந்தரவு செய்தல் (Harassment).
திறமையின்மை (Incompetence) - இதன் கிளைகள்: சோம்பல் (Indolence), ஆற்றலின்மை (Ineptitude), மறுப்புணர்வு (Resistance), மோசடி (Cheating) மற்றும் திருட்டு (Theft).
இப்படி தான் உலகளாவிய அளவில் ஊழல் வகைப்படுத்தப் பட்டுள்ளது (Universal Definition for Types of Corruption).
15ம் தேதி நடப்பதாக அறிவிக்க பட்டு இருக்கும் மாபெரும்(?) கருத்தரங்கத்தில் மேற்கண்டவைகள் தான் விவாதிக்கப்படுமா? அல்லது சகோ. K.D.N. Mohamed Lebbai போன்றோரின் எதிர்ப்பார்ப்பு மட்டும் தான் நிறைவேறுமா?( "...... முக்கியமாக நம் நகர் மன்ற உறுப்பினர் அவர்கள் வருவார்களாமா....?" - K.D.N. Mohamed Lebbai)
மேற்கண்ட ஊழலின் வகைகளை நகராட்சி உறுப்பினர்கள் மட்டும் தான் தெரிந்து கொள்ள வேண்டுமா? தலைவர் தெரிந்து கொள்ள தேவை இல்லையா?
16. Re:ஜூலை 15 அன்று “ஊழலற்ற காய... posted byHameed Rifai (Yanbu (KSA))[10 July 2012] IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19920
வாசகர் கருத்து எண் 19891 தொடர்பாக எனது எண்ணத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன்:-
இந்த நிகழ்ச்சி குறித்த நோட்டீஸில் எந்தவொரு இடத்திலும் “நகராட்சி”, “நகர்மன்றம்” என்று இல்லை. நிகழ்ச்சியும் இனிதான் நடக்கப் போகிறது. அதற்குள் நாமே முந்திக்கொண்டு ஏன் “அவங்க வருவாங்களா, இவங்க வருவாங்களா?” என யூகங்களை அள்ளி வீச வேண்டும்? நல்லதே நடக்க எதிர்பார்த்துக் காத்திருப்போம்.
இந்த நிகழ்ச்சி குறித்து நான் புரிந்துகொண்டது என்னவென்றால், நகராட்சி, அரசு வங்கிகள், அரசு பள்ளிகள், கல்லூரிகள், அஞ்சலகம் உள்ளிட்ட அனைத்து அரசு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிலும் கூட - ஊழலுக்கு ஆதரவான செயல்கள் நடக்காமல் தடுக்கும் நோக்குடன் எடுக்கப்படும் முன்முயற்சியாகவே இதை நான் கருதுகிறேன்.
எனவே, இந்நிகழ்ச்சிக்கு நகர்மன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல! தலைவரும் வர வேண்டும். தலைவரோ, உறுப்பினரோ, இதர அதிகாரிகளோ, இந்த நிகழ்ச்சியை நடத்துபவர்களோ! யாருமே வானவர்கள் (மலக்குகள்) அல்ல - தவறே செய்ய மாட்டார்கள் என்று அக்மார்க் கேரண்டி வழங்க!
எனவே, தன் பொறுப்பில் இருந்துகொண்டு தவறு செய்யக்கூடாது என்ற எண்ணமுள்ள யாரானாலும் இந்த நிகழ்ச்சியில் அவசியம் கலந்துகொள்ள வேண்டும். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் அவர்களுக்கு சிறப்பு அழைப்பிதழ்கள் மூலம் அழைப்பு கொடுக்க வேண்டும் என்ற எனது ஆவலை வெளிப்படுத்துகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross