2013 ஆம் ஆண்டிற்கான ஹஜ் பயணம் ஏற்பாடுகள் குறித்த அறிவிப்பு பிப்ரவரி 2013 இல் வெளியிடப்படும் என இந்திய ஹஜ் குழு செய்தி குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது. மேலும் - அறிவிப்பு வெளியிடப்படும் சமயத்திலேயே - ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளவர்கள் மார்ச் 31, 2014 வரை - செல்லத்தக்க பாஸ்போர்ட் வைத்திருக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில நேரங்களில் - பயணத் தொகையில் இருந்து சிறு தொகை சில காரணங்களுக்கு பயணியருக்கு திருப்பி வழங்கப்படும். அதற்கு தோதுவாக ஒவ்வொரு பயணியரும் - IFS Code - கொண்ட வங்கி கணக்கு வைத்திருக்கவேண்டும் என்றும், விண்ணப்பம் செய்யும் போது - அந்த வங்கி கணக்கில் இருந்து, ரத்து செய்யப்பட்ட காசோலை (CANCELLED CHEQUE) சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. Re:வங்கி கணக்கு இருந்தால் தா... posted bysayed abdul bari (riyadh saudi arabia )[13 July 2012] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19987
வங்கி கணக்கு இருந்தா என்ன இல்லாட்டா என்ன
வங்கி கணக்கு இருந்தால் தான் அடுத்த ஆண்டு இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் செய்ய முடியும் என்ற தலை எழுத்து பார்க்க சிரிப்பு தான் வருது..ஹஜ் கமிட்டி சட்ட படி முதல் வருடத்தில் ஹஜ் போகும் பயணிக்கு நம்பர் வர வில்லை என்றால் இரண்டாவது வருடம் அந்த பயணிக்கு : அதாவது முதல் வருடத்தில் வெய்டிங் லிஸ்ட் ஆயிரம் என்றால் இரண்டாவது வருடதில் ஒரு எட்டுநூறு அல்லது ஆயிரதிற்கு கீழ் நம்பர் வரணும். மூன்றாவது குழுக்கள் இன்றி அந்த மூன்று வருடமாக காத்து இருந்த பயணிக்கு
குலுக்கள் இன்றி அனுப்பனும் . இது தான் முறை . ஆனால் நடப்பது எல்லாம் முறை தவறிய செயல்..
முதலாம் ஆண்டு காத்து இருந்த வெய்டிங் லிஸ்டில் ஆயிரம் என்று இருந்தவர்களுக்கு இரண்டாம் ஆண்டு வெய்டிங் லிஸ்ட் இரண்டா இரத்து நானூறு என்று வருது . இது என்ன நியாயம் எங்கு தவறு நடக்குது . இங்கையும் அரசியலா. . நான் சும்மா நேரம் போக இதை எழுதலை. என் குடும்பத்தில் இப்படி நடந்ததை எழுதுஹிரேன்.
ஹஜ் கமிட்டி யை நம்பி காத்து இருந்து வயதை போக்கு வதை விட தனியார் ட்ராவல்ஸ் மூலம் ஒரே வருடதில் ஹஜ் பயணத்தை சிறபாக முடித்து விட்டு வரலாம்..
பணத்தை என்றும் சம்பாதிக்கலாம். ஆனால் வயதை குறிப்பிட்ட காலம் தான் வாழ முடியும். அதற்க்குள் ஹஜ் கடமையை முடித்து விடனும்,
ஹஜ் கமிட்டியில் நான்கு ஆண்டு அப்பளை செய்து இன்னும் போகாத்வர்கள் நம் ஊரில் இருக்கிறார்கள் .
குறிப்பு
நான் ஹஜ் கமிட்டியையோ மத்த வர்கலையோ நான் தவராக கூறலை. ஆனால் எங்கோ தவறு நடக்குது இது உண்மை.
2. Re:வங்கி கணக்கு இருந்தால் தா... posted byShahul Hameed (Hong Kong)[13 July 2012] IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 19991
செய்து அப்துல் பாரி அவர்களுக்கு!
தாங்கள் கூறுவது போல் ஹஜ்ஜு கமிட்டி மூலம் ஹஜ்ஜிக்கு போக பதிவு செய்து நான்காண்டுகளுக்கு மேல் காதிருபோரை தக்க ஆதாரத்துடன் வெளி கொண்டுவந்து பொது அமைப்புகள் மூலம் போராட வேண்டும். அப்போது தான் அங்குள்ள குறைகளை போக்க முடியும்.
3. Re:வங்கி கணக்கு இருந்தால் தா... posted bysayed abdul bari (riyadh saudi arabia )[14 July 2012] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19994
சகோதரர் சாகுல் ஹமீது அவர்களுக்கு சலாம்
தாங்கள் என் வாசகம் பார்த்த மைக்கு நன்றி. ஹஜ் க்கு தாக்கல் செய்து நான்கு வருடம் ஆகியும் இருக்கும் நபரின் விளக்கம் விரைவில் தருஹிரேன். வஸலாம்
இவன்
அப்துல் பாரி
ரியாத்
4. Re:வங்கி கணக்கு இருந்தால் தா... posted bysayed abdul bari (riyadh saudi arabia )[15 July 2012] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20004
அன்பர் சாகுல் ஹமீது ஹாங்காங் தாங்கள் ஹாங்காங்கில் இருப்பதால் மர்ஹூம் b மஹ்மூத் ஹாஜி அவர்களை தங்களுக்கு தெரியும். அவர்கள் மகன் மர்ஹூம் முஹ்சின் அவர்கள் எனக்கும் சாச்சப்பா வீட்டு காக்காதான். அவர்கள் மனைவிக்கு தான் கடந்த நான்கு வருடமாக ட்ரை பண்ணியும் ஒன்றும் நடக்கலை.
இதை எல்லாம் அவர்களிடம் எடுத்து சொல்ல நமக்கு நேரமும் இல்லை எனவே நமக்கு எது முதலாக தெரியுதோ
அதை செய்வது நல்லது. இத்துடன் இந்த மேட்டர் முடிவுக்கு வருது. வஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross