இந்திய ரயில்வே மூலம் பயணம் மேற்கொள்வோர் வசதிக்காக தட்கல் முன்பதிவு முறை நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தில் - வழமையான தொகையை விட கூடுதல் தொகை செலுத்தி, டிக்கெட்கள் முன்பதிவு செய்யலாம். இத்திட்டம் மூலம் ஆண்டுக்கு சுமார் 850 கோடி ரூபாய் லாபம் - இந்திய ரயில்வே துறை பெறுகிறது.
பல முறை மாற்றம் கண்டுள்ள இந்த திட்டம், தற்போது பயண தினத்திற்கு ஒரு நாள் முன்னரே பதிவு செய்யலாம் என்ற விதிமுறைப்படி நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு முன்பதிவு துவங்கும் என்பதால், பல முன்பதிவு மையங்களில் - அதிகாலையில் இருந்து பலர் காத்திருந்து முன்பதிவு செய்து வருகின்றனர். வியாபார நோக்கில் சிலர் இந்த திட்டத்தினை பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டும் அவ்வப்போது வெளிவந்துள்ளது.
இன்று முதல் இந்திய ரயில்வே - தட்கல் முன்பதிவில் - சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி - இனி தட்கல் முன்பதிவுகள் காலை 8 மணிக்கு பதிலாக காலை 10 மணிக்கு துவங்கும். மேலும் - முன்பதிவு செய்யும் போது மொபைல் எண் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்த எண்ணை - இந்திய ரயில்வே - முன்பதிவினை ஊர்ஜிதம் செய்ய பயன்படுத்தும்.
மேலும் - ஒரே கணினி கொண்டு இயங்கும் முன்பதிவு மையங்களில் - காலை 10 மணி முதல் 11 மணி வரை - தட்கல் முன்பதிவுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பல கணினிகள் கொண்டு இயங்கும் முன்பதிவு மையங்களில் - தட்கல் முன்பதிவுக்கு என தனி கணினி ஒதுக்கப்படும்.
இணையதளம் மூலம் - பதிவு செய்த முகவர்கள் (Agents) - காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை காலகட்டத்தில் - முன்பதிவு செய்ய முடியாது.
ஒருமுறை உறவினர் ஒருவருக்கு, தக்கால் முறையில் முன்பதிவு செய்ய சுபுஹு தொழுதுவிட்டு அவசர அவசரமாக சென்றேன். புகைவண்டி நிலையம் சென்றதும் அதிர்ச்சி.
பயணிகள் அமருவதற்காக போடப்பட்டுள்ள நாற்காலிகளில் வரிசையாக தண்ணீர் பாட்டில், பெரிய பெரிய கற்கள், டவல்கள், இத்யாதி இத்யாதி என்று நிறைத்து வைத்து இருந்தார்கள். என்ன நாடுடா இது. யாரையும் உட்கார விடாமல் இப்படி தொல்லை செய்கிறார்களே என்று விசாரித்தால், இது தான் ரிசார்வேசனாம். முந்தைய இரவு 7 மணிக்கே வந்து கல் போட்டு ரிசார்வேசனை கன்பார்ம் செய்து விட்டார்களாம்.
நான் 19 ஆவது ஆள். காலை 8 மணி வரை தேமே.. என்று நின்றுகொண்டே இருந்தது தான் மிச்சம். இனி 10 மணி வரை நிற்கனுமாக்கும்.
(எனக்கு பின்னாடி 13 நபர்கள் இருந்தார்கள், ஆறாவது நபர் கையை கவுண்டருக்குள் நுழைக்கும் போதே, சென்னைக்கு அனைத்து வண்டியும் புல்லாகி விட்டது).
** நம் ஊருக்குள் தக்கால் முன்பதிவு மையம் ஒன்றை துவங்க முயற்சி செய்யுங்களேன். பல ஊர்களில் இப்படி தனி மையம் உள்ளதே.!! உண்டான கட்டமைப்பே வருவதற்குள் தாவு தீர்ந்து விடுகிறதா.!! அப்படின்னா சரிதான்.
இதில் எது சரி, 'தட்கல்' , 'தற்கல்', 'தக்கல்', 'தக்கால்'.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross