தென்மேற்குப் பருவமழை துவங்க கால தாமதமாவதால், காயல்பட்டினம் உள்ளிட்ட பெரும்பாலான ஊர்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது.
இதனைக் கருத்திற்கொண்டு, காயல்பட்டினத்திலுள்ள 18 வார்டுகளிலும் லாரிகள் மூலம் காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
குடிநீர் வினியோகத்தின்போது, அந்தந்த வார்டுகளின் உறுப்பினர்கள் பலர் பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்து, சீரான குடிநீர் வினியோகத்திற்கு உறுதுணை புரிந்து வருகின்றனர்.
படங்களில் உதவி:
S.I.ஹைதர் அலீ,
முஹம்மத் மஃபாஸ். |