காயல்பட்டினம் முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபிக்கல்லூரியின் வெள்ளி விழா, பட்டமளிப்பு விழா, மாணவியர் விடுதி திறப்பு விழா ஆகிய நிகழ்ச்சிகள், ஜூன் 29 அன்று துவங்கி, ஜூலை 01 வரை மூன்று தினங்கள் காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் வெளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த - எஸ்.எம்.ஆயிஷத்துர் ராபிஆ ஆலிமா முஅஸ்கரிய்யா நினைவரங்கத்தில் நடைபெற்றது.
முதல் நாள் நிகழ்ச்சிகள் (பெண்கள் நிகழ்ச்சி):
முதல் அமர்வு:
29.06.2012 வெள்ளிக்கிழமை காலை 09.30 மணிக்கு முதல் அமர்வு துவங்கியது. பெண்கள் நிகழ்ச்சியாக நடைபெற்ற இந்த அமர்விற்கு, ஹாஜ்ஜா நஹ்வீ எம்.எம்.கதீஜத்துல் குப்றா தலைமை தாங்கினார். நஹ்வீ எம்.எம்.முஹம்மத் ஆமினா முஅஸ்கரிய்யா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
டி.டி.சித்ரத்துல் முன்தஹா முஅஸ்கரிய்யா கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். என்.எஸ்.ஹலீமுன் நிஸா வரவேற்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மாணவியர் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பேச்சுப் போட்டி:
பின்னர், “மஹ்ஷரில் மன்னர் நபிகளார்” என்ற தலைப்பில், பேச்சுப் போட்டி நடைபெற்றது. இதனை, எம்.ஏ.எஸ்.முத்து கதீஜா நடத்தினார். நிறைவாக, ஹாஜ்ஜா கத்தீப் எம்.எச்.தாஹிரா துஆவுடன் முதல் அமர்வு நிறைவுற்றது.
இரண்டாம் அமர்வு:
அன்று மாலை 04.30 மணிக்குத் துவங்கிய இரண்டாவது அமர்வு பெண்கள் நிகழ்ச்சிக்கு ஹாஜ்ஜா டி.ஓ.சித்தி கதீஜா தலைமை தாங்கினார். எஸ்.ஏ.கே.ஜெய்னப் நாச்சி முஅஸ்கரிய்யா நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார். எச்.ஹஃப்ஸா கிராஅத் ஒதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். ஹாஜ்ஜா என்.எச்.பல்கீஸ் ஃபாத்திமா முஅஸ்கரிய்யா வரவேற்புரையாற்றினார். பின்னர், மாணவியரின் சிறப்பு நிகழ்ச்சிகள் துவங்கின.
கருத்துச் சிதறல்:
“திருமணம் இஸ்லாமிய கல்விக்கு படிக்கல்லா, தடைக்கல்லா?” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்துச் சிதறல் நிகழ்ச்சியை ஹாஃபிழா எஸ்.எச்.உம்மு ஹபீபா முஅஸ்கரிய்யா வழிநடத்தினார். ஹாஜ்ஜா எம்.மைமூன் கதீஜா முஅஸ்கரிய்யா, ஹாஃபிழா எம்.ஏ.சி.ஃபாத்திமா பீவி முஅஸ்கரிய்யா ஆகியோர் இதில் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.
மூன்றாம் அமர்வு:
தஃப்ஸீர் போட்டி:
அன்று மாலை 06.45 மணிக்கு 3ஆம் அமர்வு பெண்கள் நிகழ்ச்சி துவங்கியது. இவ்வமர்வின் நிகழ்ச்சிகளை ஹாஜ்ஜா ஏ.எம்.ஜம்ஜம் ஆயிஷா நெறிப்படுத்தினார். கல்லூரயின் முன்னாள் மாணவியர் பங்கேற்ற திருக்குர்ஆன் விளக்கம் - தஃப்ஸீர் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை திரை மறைவிலிருந்து கல்லூரி நிறுவனரும் - முதல்வருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ வழிநடத்தினார்.
பின்னர், பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஹாஜ்ஜா எஸ்.ஏ.ஜெஸீமா, ஹாஜ்ஜா எம்.எச்.கதீஜா பீவி, ஹாஜ்ஜா எம்.எஸ்.ஜெமீலா, ஹாஜ்ஜா நஹ்வீ எஸ்.ஐ.முஹ்யித்தீன் ஃபாத்திமா ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் (பெண்கள் நிகழ்ச்சி):
நான்காம் அமர்வு:
மறுநாள் 30.06.2012 சனிக்கிழமை காலை 09.30 மணிக்கு 04ஆம் அமர்வு துவங்கியது. ஒய்.எஸ்.பால் ஆமினா அரூஸிய்யா இவ்வமர்விற்குத் தலைமை தாங்கினார். எஸ்.ஐ.ஹமீதா பானு முஅஸ்கரிய்யா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். வி.எம்.ஏ.ஷெய்கு தவ்ஃபீக்கா கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். எஸ்.என்.செய்யித் இஸ்மாஈல் நாச்சி முஅஸ்கரிய்யா வரவேற்புரையாற்றினார். பின்னர், இறைப்புகழ், இறைத்தூதர் புகழ், இறைநல்லடியார் புகழ்பாக்கள் பாடப்பட்டன.
ஹிஃப்ழுப் போட்டி:
பின்னர், கல்லூரியின் பகுதி நேர மாணவியருக்கான திருக்குர்ஆன் மனனம் - ஹிஃப்ழுப் போட்டி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, “முத்தான கேள்விக் கொத்து” என்ற தலைப்பில் நடைபெற்ற - கல்லூரி மாணவியர் பங்கேற்ற நிகழ்ச்சியை, ‘முத்துச்சுடர்‘ ஹாஃபிழா என்.டி.முத்து ஹலீமா முஅஸ்கரிய்யா, ஹாஃபிழா நஹ்வீ எஸ்.எச்.கதீஜத் சுமய்யா முஅஸ்கரிய்யா ஆகியோர் வழிநடத்தினர். ஐ.எல்.ஜவ்ஹரிய்யா ஃபாத்திஹா துஆவுடன் 04ஆம் அமர்வு நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
ஐந்தாம் அமர்வு:
அன்று மாலை 04.45 மணிக்குத் துவங்கிய 05ஆம் அமர்வு நிகழ்ச்சிக்கு, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் பாளையம் ஐ.ஆபிதா தலைமை தாங்கினார். ஹாஃபிழா எம்.எஸ்.ஃபாத்திமா ரமீஸா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். எம்.எம்.செய்யித் முஹம்மத் ஃபாத்திமா கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். நஹ்வீ எஸ்.எச்.பால் ஆமினா முஅஸ்கரிய்யா வரவேற்புரையாற்றினார்.
தலைமையுரையைத் தொடர்ந்து, மாணவியர் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர், ஹாஜ்ஜா எம்.ஐ.கதீஜத்துல் குப்றா கல்லூரியின் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.
மகளிர் கருத்தரங்கம்:
அமர்வின் நிறைவாக, “மாண்புறும் மனையாட்சி - ஒரு கண்ணோட்டம்” என்ற தலைப்பில், கல்லூரியின் முன்னாள் மாணவியர் பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆறாம் அமர்வு:
நஅத் மஜ்லிஸ்:
அன்று மாலை 06.45 மணிக்குத் துவங்கிய 06ஆவது அமர்வு பெண்கள் நிகழ்ச்சியை, ஐ.எல்.செய்யித் ராபியா முஅஸ்கரிய்யா நெறிப்படுத்தினார். கல்லூரியின் ஆசிரியையர் பங்கேற்ற “பெண்கள் ரசகியம்” எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, பூமான் நபியின் புகழ்பாடும் நஅத் ஷரீஃப் மஜ்லிஸ் நடைபெற்றது.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில், ஹாஜ்ஜா ஞானி எம்.ஐ.வஜீஹா, ஹாஜ்ஜா கம்பல்பக்ஷ் எஸ்.எச்.செய்யித் ஃபாத்திமா, ஹாஜ்ஜா எஸ்.ஏ.சி.ஹலீமா பீவி, ஹாஜ்ஜா வி.எம்.எச்.கதீஜா உம்மாள் ஆகியோர் மாணவியருக்கு பரிசுகளை வழங்கினர்.
மூன்றாம் நாள் நிகழ்ச்சிகள் (பொது நிகழ்ச்சி):
01.07.2012 ஞாயிற்றுக்கிழமையன்று மூன்றாம் நாள் நிகழ்ச்சி - ஆண்கள் நிகழ்ச்சியாக நடைபெற்றது.
அன்று காலை 09.30 மணிக்குத் துவங்கிய காலை அமர்வு நிகழ்ச்சிகளுக்கு, காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் துணைத்தலைவர் ஹாஜி டி.எம்.கே.சுல்தான் அப்துல் காதிர் தலைமை தாங்கினார். ஹாஃபிழ் எஸ்.எல்.செய்யிதஹ்மத் முத்துவாப்பா கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் வரவேற்புரையாற்றினார்.
வாழ்த்துரை:
அதனைத் தொடர்ந்து, மார்க்க அறிஞர்களின் சிறப்புரை நடைபெற்றது. மவ்லவீ யு.முஹம்மத் ஸலீம் ஸிராஜீ, மவ்லவீ ஹாஃபிழ் டி.எஸ்.ஏ.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ, மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ, மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.இஸ்ஹாக் லெப்பை மஹ்ழரீ, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் திருக்குர்ஆன் மனன - ஹிஃப்ழுப் பிரிவு பேராசிரியர் ஹாஃபிழ் வி.எஸ்.முஹம்மத் முஹ்யித்தீன் ஹஜ்ரத்தின் துஆவுடன் காலை அமர்வு நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
அன்று மாலை 04.45 மணிக்குத் துவங்கிய மாலை அமர்விற்கு, இலங்கை சம்மாங்கோட் பள்ளியின் கத்தீப் மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யிதஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ தலைமை தாங்கினார். ஹாமிதிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸா ஆசிரியர் ஹாஃபிழ் எஸ்.ஜி.நஸீம் காதிர் ஸாஹிப் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். நஹ்வீ எம்.எம்.முத்துவாப்பா வரவேற்புரையாற்றினார்.
ஆரோக்கிய வாழ்வு - கருத்தரங்கம்:
அதனைத் தொடர்ந்து, “ஆரோக்கிய வாழ்வு” எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ, டாக்டர் எம்.எஸ்.மஹ்பூப் சுபுஹானீ, சென்னை பல்கலைக் கழகத்தின் அரபி மொழித்துறை பேராசிரியர் முனைவர் வி.எஸ்.அன்வர் பாஷா ஆகியோர் இக்கருத்தரங்கில் கருத்துரையாற்றினர்.
காயல்பட்டினம் மஸ்ஜிதுல் ஆமீர் - மரைக்கார் பள்ளியின் இமாம் ஹாஜி டி.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத் துஆவுடன் மாலை அமர்வு நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
அன்று மாலை 06.45 மணிக்கு இரவு அமர்வு நிகழ்ச்சிகள் துவங்கின. மஹ்ழரா அரபிக்கல்லூரியின் திருக்குர்ஆன் மத்ரஸா ஆசிரியர் ஹாஃபிழ் சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். ஹாஜி என்.டி.ஷெய்கு மொகுதூம் வரவேற்புரையாற்றினார்.
அடுத்து, இவ்வமர்விற்குத் தலைமை தாங்கிய மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ தலைமையுரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, முன்னிலை வகித்த - காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ வாழ்த்துரை வழங்கினார்.
மலர் - குறுந்தகடு வெளியீடு:
அதனைத் தொடர்ந்து, கல்லூரி ஆசிரியையர் - மாணவியர் படைப்பில் உருவான “ரஃப் ரஃப்” என்ற தலைப்பிலான சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. சமுதாயப் பிரமுகர் ஹாஜி பிஸ்மி யூனுஸ் மலரை வெளியிட, காயல்பட்டினம் நகர்மன்றத்தின் முன்னாள் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் மற்றும் நகரப் பிரமுகர்கள் துவக்கப் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனரும், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபுமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ ஆற்றிய உரைகளடங்கிய குறுந்தகடை, நிகழ்ச்சியில் முன்னிலை வகித்த - இலங்கை “வெற்றி” மாத இதழின் ஆசிரியர் ஹாஜி ஃபலாஹ் மவ்லானா வெளியிட, நகரப்பிரமுகர்கள் அதனைப் பெற்றுக்கொண்டனர்.
மாணவியர் விடுதி திறப்பு:
பின்னர், வெளியூரிலிருந்து கல்வி பயில வரும் மாணவியர் வசதிக்காக கட்டி முடிக்கப்பட்டுள்ள மாணவியர் விடுதியின் பெயர்ப் பலகையை, அனைவரின் தக்பீர் முழக்கத்திற்கிடையில், விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - இலங்கை மேல் மாகாண ஆளுநரின் தனிச் செயலாளர் ஹாஜி அஸ்ஸெய்யித் அஹ்மத் நகீப் மவ்லானா திறந்து வைத்தார்.
பின்னர், சிறப்பு விருந்தினர்களுக்கும், முன்னிலை வகித்தோருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.
பெண்கள் பகுதியில் - ஹாஜ்ஜா ஒய்.எஸ்.ஃபவ்ஸிய்யா, ஹாஜ்ஜா எம்.எஸ்.சித்தி கதீஜா ஆகியோர் நினைவுப் பரிசுகளை வழங்கினர்.
ஆண்டறிக்கை:
பின்னர், கல்லூரியின் ஆண்டறிக்கையை - கல்லூரியின் நிறுவனரும், முதல்வருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ சமர்ப்பித்தார்.
ஸனது - பட்டமளிப்பு:
பின்னர், கல்லூரியில் மூன்றாண்டு கல்வித் திட்டத்தின் கீழ் பயின்று தேர்ச்சி பெற்ற 52 மாணவியருக்கு “ஆலிமா முஅஸ்கரிய்யா” ஸனதும் (பட்டச் சான்றிதழ்), திருக்குர்ஆனை முழுமையாக மனனமிட்டு முடித்த 6 மாணவியருக்கு - “ஹாஃபிழத்துல் குர்ஆன்” ஸனதும் வழங்கப்பட்டது. மாணவியர் பெயர் பட்டியல் பின்வருமாறு:-
பட்டம் பெறும் மாணவியர் பெயர் பட்டியலை ஆண்கள் பகுதியிலிருந்து கல்லூரி முதல்வர் வாசிக்க, பெண்கள் பகுதியில் ஹாஜ்ஜா ஒய்.எஸ்.ஃபாத்திமா பீவி, ஹாஜ்ஜா எஸ்.கே.பால் ஆமினா, ஹாஜ்ஜா எம்.டி.சாரா உம்மா ஆகியோர் மாணவியருக்கு ஸனது - பட்டச் சான்றிதழை வழங்கினர்.
பின்னர், மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ ஸனது - பட்டச் சான்றிதழ் குறித்து விளக்கவுரையாற்றினார்.
சிங்கை கா.ந.மன்றத்தின் ஹாஃபிழ் ஊக்கப் பரிசு:
பின்னர், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் - ஹாஃபிழ்-ஹாஃபிழாக்கள் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், இவ்விழாவில் “ஹாஃபிழத்துல் குர்ஆன்” பட்டம் பெற்ற 6 மாணவியருக்கு தலா ரூபாய் 2,500 ஊக்கப்பரிசுத் தொகையை, அம்மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான் - சிறப்பு விருந்தினர் அஸ்ஸெய்யித் அஹ்மத் நகீப் மவ்லானாவிடம் வழங்க, அவர் அப்பரிசுத் தொகையை - பட்டம் பெற்ற மாணவியரின் உறவினர்களிடம் வழங்கினார்.
ஹாஜி கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத் நன்றி கூற, மவ்லவீ அஷ்ஷெய்க் டபிள்யு எம்.எம்.செய்யித் முஹம்மத் பாக்கவீ துஆ ஓத, ஸலவாத் - ஸலாம் பைத்துடன் விழா நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
நிகழ்ச்சி நெறியாளர்கள்:
நிகழ்ச்சிகளனைத்தையும், இலங்கை வானொலி அறிவிப்பாளர்களான ஹாஜி எஸ்.எச்.எம்.செய்யித் ரஸ்மி மவ்லானா, ஹாஜி ஏ.ஆர்.எம்.ஜிஃப்ரீ, ஹாஃபிழ் எம்.ஐ.கே.செய்யித் அபூதாஹிர் ஆகியோர் நெறிப்படுத்தினர்.
நிகழ்ச்சிகளனைத்திலும், நகரின் பல பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் உள் வளாகத்திலும், ஆண்களுக்கு வெளி வளாகத்திலும் இட வசதி செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, எம்.அஹ்மத் ஃபுஆத் தலைமையில், எஸ்.ஐ.அஹ்மத் முஸ்தஃபா, ஹாஜி கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத், ஹாஜி எம்.ஐ.தமீமுல் அன்ஸாரி, சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர், ஹாஜி எம்.எஸ்.நூஹ் ஸாஹிப், சொளுக்கு ஷெய்கு அப்துல் காதிர், எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், ஹாஃபிழ் ஏ.ஏ.சி.ஹாஃபிழ் அமீர், எம்.ஜே.செய்யித் இப்றாஹீம், எஸ்.எச்.சொளுக்கு, எல்.எம்.இ.கைலானீ மற்றும் குழுவினரும், கல்லூரியின் ஆசிரியையர் - நிர்வாகிகள் - மாணவியரும் செய்திருந்தனர்.
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 17:55/12.07.2012] |