காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியில், பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்கள் - அவர்களின் வாராந்திர விடுமுறையின்போது இஸ்லாமிய மார்க்க அடிப்படைக் கல்வியைக் கற்பதற்காக, 8 ஆண்டு பாடத்திட்டத்தைக் கொண்டு செயல்பட்டு வருகிறது அல்மக்தபத்துர் ராஸிய்யா எனும் தீனிய்யாத் பயிற்சிப் பிரிவு.
இம்மாணவர்கள் பங்கேற்பில் - பேச்சுப்போட்டி, திருக்குர்ஆன் சிறு அத்தியாயங்கள் மனனப் போட்டி, கிராஅத் போட்டி வினா-விடைப் போட்டி, துஆக்கள் போட்டி என பல்வேறு போட்டிகளும், மாணவர் சிறப்பு நிகழ்ச்சிகளும், 29.06.2012 முதல் 01.07.2012 வரை ஜாவியா வளாகத்தில் நடைபெற்றது.
அப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் தீனிய்யாத் பிரிவில் 8 ஆண்டு கற்றுத் தேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி 08.07.2012 அன்று ஜாவியா வளாகத்தில் நடைபெற்றது.
ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ நிகழ்ச்சிகுத் தலைமை தாங்கினார். ஜாவியா நிர்வாகிகளான ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, மவ்லவீ முஹம்மத் கல்ஜீ ஃபாஸீ, மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜாவியா அரபிக்கல்லூரியின் துணை முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தின் காஷிஃபீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
கிராஅத், வரவேற்புரைகளைத் தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற 250 மாணவர்களுக்கு - துவக்கமாக பரிசுகள் வழங்கப்பட்டன. அப்பரிசுகளை ஜாவியா நிர்வாகிகள், நகரப் பிரமுகர்கள் வழங்கினர்.
குறிப்பாக, உள்ளூர் - வெளியூர்களில் நடைபெற்ற திருக்குர்ஆன் மனன - ஹிஃப்ழு போட்டிகளில் முதலிடம் பெற்று - சுமார் 25 முறை திருக்குர்ஆனை மீள்பார்வை (தவ்ர்) செய்த மாணவர் ஹாஃபிழ் எஸ்.என்.தைக்கா தம்பிக்கு, ரூ.1,500 மதிப்புள்ள சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது. பரிசுகளை, ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, ஹாஜி சதக்கத்துல்லாஹ் என்ற சானா தானா, ஹாஜி எம்.எஸ்.மரைக்கார், ஹாஜி என்.கே.இப்றாஹீம், மவ்லவீ ஏ.எச்.முஹம்மத் கல்ஜீ ஃபாஸீ, மஹ்ழரா அரபிக்கல்லூரியின் செயலாளர் ஹாஜி எம்.ஏ.எஸ்.அபூதல்ஹா மற்றும் பலர் பரிசுகளை வழங்கினர்.
அடுத்து, தீனிய்யாத் பிரிவில் 8 ஆண்டு கற்றுத் தேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ் - ஸனது வழங்கப்பட்டது. இவ்வாண்டுடன் 8 ஆண்டுகளைப் பூர்த்தி செய்த 8 மாணவர்களுக்கு - கல்லூரி முதல்வர் மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர், ஜாவியா அரபிக்கல்லூரியின் அனைத்து ஆசிரியர்களையும் கவுரவிக்கும் வகையில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. ஜாவியா நிர்வாகி ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ அவற்றை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மவ்லவீ கத்தீப் அஹ்மத் அப்துல் காதிர், காயல்பட்டினம் அஹ்மத் நெய்னார் பள்ளியின் முத்தவல்லி ஹாஜி எஸ்.கே.இசட்.ஜெய்னுல் ஆபிதீன், ஹாஜி எஸ்.ஜே.இப்றாஹீம் கலீல், ஹாஜி எஸ்.ஏ.பீர் முஹம்மத், ஹாஜி வட்டம் ஹஸன் மரைக்காயர், ஹாஜி எஸ்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, ஹாஜி ஏ.ஆர்.இக்பால் உள்ளிட்ட நகரப் பிரமுகர்களும், பொதுமக்களும் திரளாகப் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை, ஜாவியா அரபிக்கல்லூரியின் துணை முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ தலைமையில் கல்லூரி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
[கூடுதல் விபரங்கள் இணைக்கப்பட்டது @ 15:30/18.07.2012] |