தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் காயல்பட்டினம் கிளை சார்பில், காயல்பட்டினம் அலியார் தெருவில் - மஸ்ஜிதுத் தவ்ஹீத் என்ற பெயரில் புதிய ஜும்ஆ பள்ளி, 13.07.2012 வெள்ளிக்கிழமை (நேற்று) காலை ஃபஜ்ர் தொழுகையுடன் ஐவேளை தொழுகை துவக்கப்பட்டது. அன்று நண்பகல் 12.30 மணிக்கு - முதல் ஜும்ஆ தொழுகை துவங்கியது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மேலாண்மைக் குழு உறுப்பினர் அப்பாஸ் அலீ குத்பா பேருரை நடத்தியதோடு, ஜும்ஆ தொழுகையையும் வழிநடத்தினார்.
நேற்று மாலை 05.00 மணிக்கு தர்பிய்யா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு மரைக்கார் ஆலிம் தலைமை தாங்கினார். சாலப்பா, வி.பி.எம்.ஷம்சுத்தீன், எம்.ஒய்.ஹாஜா முஹ்யித்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மேலாண்மைக் குழு உறுப்பினர் அப்பாஸ் அலீ தர்பிய்யா நிகழ்ச்சியை நடத்தினார்.
ஜும்ஆ தொழுகை மற்றும் தர்பிய்யா நிகழ்ச்சிகளில் நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் லக்கி மக்கீ, காயல்பட்டினம் கிளை தலைவர் எஸ்.ஷம்சுத்தீன், துணைத்தலைவர் சாலப்பா முஹம்மத் அப்துல் காதிர், செயலாளர் ஷஃபீக், துணைச் செயலாளர் ஹஸன், பொருளாளர் ஜப்பான் சுலைமான் மற்றும் மாவட்ட - நகர நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ,
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, காயல்பட்டினம். |