மகிழ்ச்சிகரமான மண வாழ்விற்கும், குழப்பங்களற்ற குடும்ப வாழ்விற்கும் நல்ல பல ஆலோசனைகளை வழங்கும் நோக்குடன், “மனமே மருந்து” என்ற தலைப்பில் மகளிருக்கான கருத்தரங்கம் 15.07.2012 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 05.00 மணிக்கு, காயல்பட்டினம் மகுதூம் தெருவிலுள்ள ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளியில் நடைபெற்றது.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, அவரது கணவர் ஷேக், க்ரீன் ப்ரோ நிறுவனத்தின் அதிபர் புகாரீ ஆகியோர் முன்னிலை வகித்த இக்கருத்தரங்கில், சென்னையைச் சேர்ந்த - குடும்ப நல ஆலோசகர் ஏ.நஃபீஸ் அஹ்மத் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு, திருமண வாழ்வு குறித்தும், பெண்கள் சந்திக்கும் இன்னபிற வாழ்க்கைப் பிரச்சினைகள் குறித்தும் கருத்துரை வழங்கினார். பின்னர், பார்வையாளர்களாகப் பங்கேற்ற பெண்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் விளக்கமளித்தார்.
இக்கருத்தரங்கில், காயல்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில், “காயல்பட்டினம் பெண்கள் நலச் சங்கம் - KAYALPATNAM WOMENS' WELFARE ASSOCIATION“ என்ற பெயரில் மகளிர் அமைப்பு துவக்கப்பட்டது. கருத்தரங்கில் பங்கேற்ற பெண்கள் பலர் அவ்வமைப்பில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர். |