காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி தினமாகக் கொண்டாட வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவுப் படி, மாநிலமெங்கும் பள்ளிக்கூடங்களில் கல்வி வளர்ச்சி நாள் இன்று கொண்டாடப்பட்டது.
காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளியில் இன்று காலை 09.00 மணிக்கு கல்வி வளர்ச்சி நாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பள்ளி ஆசிரியர் கே.ஷாஹுல் ஹமீத் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். ஆசிரியர் ஷெரீஃப் முன்னிலை வகித்தார்.
மாணவர் ஹாஃபிழ் அப்துர்ரஸ்ஸாக் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் இறைவணக்கம் பாடினர்.
பின்னர் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர்.
பின்னர், பள்ளி ஆசிரியர் எம்.அப்துல் ரசாக் வரவேற்புரையாற்ற, மற்றோர் ஆசிரியர் எஸ்.செய்யித் மஸ்ஊத் சிறப்புரையாற்றினார்.
பின்னர் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பேச்சுப்போட்டியில் வென்ற மாணவர்களுக்கு ஆசிரியர் விஷ்ணுராம், கட்டுரைப் போட்டியில் வென்றோருக்கு ஆசிரியை பி.சுசிலா தேவி, ஓவியப் போட்டியில் வென்றோருக்கு ஆசிரியர் ஆர்.ப்ரைட் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
ஆசிரியர் பி.செய்யித் அப்துல் காதிர் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியில், பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல்:
S.M.அஹ்மத் சுலைமான்,
ஆசிரியர், சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, காயல்பட்டினம். |