காயல்பட்டினத்தில் - பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள மக்களின் மருத்துவ தேவைக்கு ஒருங்கிணைந்த முறையில் பொருளாதார உதவிகள் வழங்குவதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் மைக்ரோ காயல் அமைப்பிற்கு முழு ஒத்துழைப்பளிக்க, ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்ற செயற்குழு தீர்மானித்துள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால் துபாய் காயல் நல மன்றத்தின் ஜூலை மாத கூட்டம் மன்றத்தின் மூத்த உறுப்பினரும், ஆலோசனை கமிட்டி உறுப்பினருமான ஜனாப் விளக்கு தாவூத் ஹாஜி அவர்கள் இல்லத்தில் வைத்து வெள்ளிக்கிழமை 13/07/2012 அன்று மாலை 05.00 மணியளவில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தாவூத் ஹாஜி அவர்கள் தலைமை ஏற்று சிறப்பித்தார்கள். சிறப்பு விருந்தினராக அமீரகம் வந்திருந்த ஜனாப் ராவன்னா அபுல் ஹசன் ஹாஜி அவர்கள் வருகை தந்திருந்தார்கள். ஜனாப் எம்.இ.ஷேக் அவர்கள் இறைவசனங்களை ஓத கூட்டம் ஆரம்பமானது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-
தீர்மானம் 1 - ரமழான் வாழ்த்து:
புனித ரமழான் மாதம் நெருங்கி வருவதால், நம்மவர்கள் அனைவருக்கும் மன்றத்தின் சார்பில் "ரமழான் கரீம்" வாழ்த்துக்கள் தெரிவிப்பதோடு, நாம் அனைவர்களும் இப்புனித மாதத்தில் செய்யும் கிரிகைகள் அனைத்தையும் எல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்றுக்கொண்டு நாம் செய்யும் பிரார்த்தனைகளை கபூல் செய்வானாகவும். ஆமீன்.
தீர்மானம் 2 - மன்றத்தின் நகர்நலப் பணிகளுக்கு ஜகாத் நிதியளிக்க உறுப்பினர்களுக்கு வேண்டுகோள்:
மன்றத்தின் செயல்பாடுகளுக்கு உதவும் வகையில் மன்றத்தின் உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் ஜக்காத் நிதியின் ஒரு பகுதியை மன்றத்திற்கு தந்து உதவும் படி வேண்டுகோள் விடுத்து, அப்படி கொடுக்க விரும்புவோர் சகோதரர்கள் யஹ்யா முஹ்யித்தீன், யூனுஸ் மற்றும் மூசா நைனா ஆகியோரிடம் கொடுக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தீர்மானம் 3 - மைக்ரோ காயல் அமைப்பிற்கு முழு ஒத்துழைப்பு:
மைக்ரோ காயல் அமைப்பிற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டது. இந்த ஒத்துழைப்பை நெறிப்படுத்துவதர்க்காக சகோதரர் முஹம்மது அலி அவர்கள் நமது அமைப்பின் மருத்துவ உதவிக் குழுவை வழிநடாத்தி செல்வார் என்றும் அதற்குப் பின்னர் மருத்துவத்திற்கு என்று ஒதுக்கப்படும் தொகையை இப்போது இருக்கும் மருத்துவ உதவிக்குழுவினர் தீர்மானிப்பர்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர், சிறப்பு விருந்தினர் ஜனாப் ராவன்னா அபுல் ஹசன் (லேன்ட் மார்க்) அவர்கள் தங்களது சிறப்புரையில் ஊர் நலம் பற்றி பொதுவாகவும், பாதாள சாக்கடை திட்டத்தின் பாதகங்கள் பற்றி மிகவும் விரிவாக எடுத்துரைத்தார்கள். ஊரில் கேன்சர் வியாதியின் ஆதிக்கம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போவதாகவும் அதற்கு எல்லோரும் கூட்டாக முயற்சி செய்தால்தான் ஒரு தீர்வு காண முடியும் என்றும், DCW பற்றி பேசுகையில் அப்படி பட்ட ஒரு பெரிய தொழிற்சாலையை எதிர்கொள்ள நம்மிடம் போதிய ஆதாரங்கள் மற்றும் பொருளாதாரமும் வேணடும் என்று வலியுறுத்தினார்கள்.
உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினருடன் கலந்துரையாடலில் ஊர் நலம் பற்றி பல கருத்துக்கள் பரிமாறப்பட்டன. தேநீர் விருந்திர்க்குப்பின் துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவேறியது.
இவ்வாறு, துபை காயல் நல மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
சாளை ஷேக் ஸலீம்,
துணைத்தலைவர்,
துபை காயல் நல மன்றம்.
படங்கள்:
பாஜுல் ஹமீத்.
துபை. |