காயல்பட்டினம் நகராட்சியில் நடத்தப்படும் அனைத்து வகைக் கூட்டங்களிலும் ஊடகத்தினரை அனுமதிக்கக் கோரி, காயல்பட்டினம் மக்கள் சேவாக் கரங்கள் சார்பில், அதன் நிறுவனர் பா.மு.ஜலாலீ, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளார். அம்மனுவில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை பின்வருமாறு:-
பஞ்சாயத்துக்கள், நகராட்சிகளில் பொது மாதக் கூட்டங்கள், தலைவர் - உறுப்பினர்கள் கலந்துரையாடல், மக்கள் குறை தீர்க்கும் கூட்டங்களில் எழுப்பப்படும் பிரச்சினைகள், உரையாடல்கள், தீர்மானம் ஆகியன மீடியாக்களின் வாயிலாக பொதுமக்களுக்கு போய் சேர்கின்றன. இதன் மூலம் மக்கள் தத்தம் பொது பிரச்சினைகள், அதற்குரிய தீர்வுகளை அறிய முடிகின்றது.
மீடியாக்களை அனுமதிக்காவிட்டால், மக்கள் பிரச்சினைகள், தீர்வுகள் மக்களுக்குப் போய் சேராது. எல்லா மக்களும் கூட்டத்தில் பார்வையிட முடியாது. எனவே, மீடியாக்கள் - பார்லிமெண்ட், சட்டசபை மற்றும் பொது மன்றங்கள், நகராட்சி அலுவல்கள் கூட்டங்களில் அனுமதிக்கப்படுகின்றனர்.
(PUBLIC: DISTRICT MUNICIPALITIES ACT 1920 Schedule 3, Section 4)இன் படி, பொதுமக்களைக் கூட நகர்மன்றக் கூட்டங்களில் பார்வையிட அனுமதியுண்டு என்று முனிசிபாலிட்டி வரைமுறை சட்டம் எடுத்துரைப்பதால், வரைமுறைப்படுத்தப்பட்டு, மீடியாக்களை தொடர்ந்து காயல்பட்டினம் நகராட்சி கூட்டங்களில் கலந்துகொள்ள அனுமதிக்கும்படி வேண்டுகின்றோம்.
இவ்வாறு, அம்மனுவில் கோரப்பட்டுள்ளது. |