ரமழான் (1433) மாத அமாவாசை ஜூலை 19 வியாழக்கிழமை அன்று - இங்கிலாந்து நேரப்படி காலை 4:23 மணி அளவில் ஏற்படுகிறது. அப்போது
இந்திய நேரம் காலை 9:53 மணி.
ஜூலை 19 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:40 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 6:47. சூரியன் மறையும்போது
சந்திரனின் வயது 9 மணி நேரம். சூரியன் மறைந்து 7 நிமிடங்கள் பிறகு சந்திரன் மறைந்தாலும் அன்று வெறுங்கண்கள் கொண்டு பிறையை
காயல்பட்டணத்தில் காண இயலாது.
ஜூலை 19 அன்று தெற்கு பசிபிக் கடல் பகுதியில் வெறுங்கண்கள் கொண்டும், தென் அமெரிக்கா, தெற்கு ஆப்ரிக்காவின் தென் கோடி ஆகிய
பகுதிகளில் தொலைநோக்கிகள் உதவிக்கொண்டும் பிறையை காணலாம்.
ஜூலை 20 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:40 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 7:33. சூரியன் மறையும்போது
சந்திரனின் வயது 33 மணி நேரம். அன்று காயல்பட்டணத்தில் பிறையை வெறுங்கண்கள் கொண்டு காணலாம்.
மேலும் தென் சீனா, வட இந்தியா,
பாகிஸ்தான், வட அரேபியா, ஐரோப்பா, வட அமெரிக்காவின் வடக்கு பகுதிகள் ஆகியவற்றில் வானம் தெளிவாக இருந்தாலும், உலகின் பிற
பகுதிகளில் எளிதாகவும் - வெறுங்கண்கள் கொண்டு - பிறையை காணலாம்.
பிறையை கணக்கிட்டு அறியலாம் என்ற நிலையில் உள்ளவர்க்கு ஜூலை 20 - ரமழான் 1 ஆகும்.
உலகில் எங்கே பிறை காணப்பட்டாலும் அதனை ஏற்று கொள்ளலாம் என்ற கொள்கையில் உள்ளவர்க்கு ஜூலை 19 (அமாவாசை) அன்று ஸஃபான் 29
பூர்த்தி ஆகிறது. அன்று தெற்கு பசிபிக் கடல் பகுதியில் பிறையை வெறுங்கண்கள் கொண்டும், தென் அமெரிக்கா, தெற்கு ஆப்ரிக்காவின் தென்
கோடி ஆகிய பகுதியில் தொலைநோக்கிகள் உதவிக்கொண்டும் பிறையை காண வாய்ப்பு உள்ளது. அவ்வாறு அப்பகுதிகளில் இருந்து தகவல்
கிடைக்கப்பெற்றால் அவர்களுக்கு ஜூலை 20 - ரமழான் 1 ஆகும். அல்லது ஜூலை 20 அன்று ஸஃபான் 30 பூர்த்தி செய்யப்பட்டு, ஜூலை 21
அன்று - ரமழான் 1 ஆகும்.
அந்தந்த இடங்களில் பிறை காணப்பட வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவர்களுக்கு ஜூலை 19 அன்று ஸஃபான் 28 பூர்த்தி ஆகிறது. ஜூலை 20
அன்று காயல்பட்டணத்தில் எளிதாக பிறை தெரிய வாய்ப்புள்ளது. ஆகவே - அன்று ஸஃபான் 29 பூர்த்தி செய்து, அவர்களுக்கு ஜூலை 21 அன்று
ரமழான் துவங்கும். அன்று - மேகமூட்டமோ, அல்லது இதர காரணங்களுக்காக பிறை தென்படவில்லை எனில், அவர்கள் ஜூலை 21 அன்று
ஸஃபான் 30 பூர்த்தி செய்து, ஜூலை 22 அன்று ரமழானை துவக்குவர். |