இந்திய முழுவதும் அரசாங்கப் பணிகள் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் - பல துறைகள் தற்போது கணினி மயமாக்கப்பட்டுள்ளன.
இதில் உள்ளாட்சி மன்றங்களும் அடங்கும்.
காயல்பட்டினம் நகராட்சியில் கணினி பயன்பாடு குறித்து தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது. கீழ்க்காணும் தகவல்கள் - சென்னையில் உள்ள நகராட்சி
நிர்வாகத்துறையின் வசம் உள்ள தகவல்கள் அடிப்படையில் வெளியிடப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் - ORACLE மென்பொருள் அடிப்படையில், மக்கள் சேவைகள் (eGovernance) கணினி
மயமாக்கப்பட்டுள்ளன. இதில் கீழ்க்காணும் 18 சேவைகள் (Modules) அடங்கும்.
1. Property Tax
2. Water Charges
3. Profession Tax
4. Non Tax
5. Financial Accounting System
6. Pay Roll
7. Birth & death Records Maintenance
8. Building Plan Approval System
9. Hospital Records Maintenance
10. Family enumeration
11. Movable & Immovable Properties
12. Grievances Records
13. Census Records
14. Stores & Inventory
15. Solid Waste Management
16. Dangerous & Offensive Trade License
17. Vehicle Records Maintenance
18. Electoral Rolls
இந்த 18 சேவைகளில் காயல்பட்டினம் நகராட்சியில் 14 சேவைகள் கணினி மூலம் நடைபெறுவதாக - நகராட்சி நிர்வாகத்துறை வழங்கும் தகவல்கள்
கூறுகின்றன. அதாவது 18 சேவைகளில் - கீழ்க்காணும் 4 சேவைகள் தவிர - அனைத்து சேவைகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளதாக
கூறப்படுகிறது.
1. Hospital Records Maintenance
2. Family enumeration
3. Census Records
4. Electoral Rolls
காயல்பட்டினம் நகராட்சியில் எத்தனை கணினிகள் உள்ளன, எத்தனை பிரிண்டர்கள் உள்ளன என்ற தகவலும் நகராட்சி நிர்வாகத்துறை வழங்குகிறது. ஜூன் மாதம் இறுதியில் - நகராட்சியில் 9 கணினிகளும், 5 Dot Matrix பிரிண்டர்களும், 4 லேசர் பிரிண்டர்களும் உள்ளதாக -
நகராட்சி நிர்வாகத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் காயல்பட்டினம் நகராட்சியில் கணினி பயன்படுத்துவோர் - ஏழு ஊழியர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. பொது பிரிவில் (GENERAL
SECTION) 2 ஊழியர்களும், வருவாய் பிரிவில் (REVENUE SECTION) 2 ஊழியர்களும், சுகாதார பிரிவில் (HEALTH SECTION) 1 ஊழியரும்,
பொறியியல் பிரிவில் (ENGINEERING SECTION) 1 ஊழியரும் - ஆக 6 ஊழியர்கள் முழுவதாகவும், பொது பிரிவில் உள்ள 1 ஊழியர் பகுதி அளவிலும்
கணினி பயன்படுத்துவதாக - நகராட்சி நிர்வாகத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் - நிர்வாகப்பிரிவில் (ADMINISTRATIVE SECTION) எவரும் கணினி பயன்படுத்தவில்லை
எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள இதர இரண்டாம் நிலை நகராட்சிகளில் - கணினி பயன்படுத்தும் ஊழியர் எண்ணிக்கை வருமாறு:-
சாத்தூர் - 21
புளியங்குடி - 0
செங்கோட்டை - 0
அம்பாசமுத்திரம் - 13
விக்கிரமசிங்கபுரம் - 10
பத்மநாபபுரம் - 19
குழித்துறை - 16
மேலும் - காயல்பட்டினம் நகராட்சியில் இருந்து அனுப்பப்பட்ட, காயல்பட்டினம் நகராட்சிக்கு அனுப்பப்பட்ட, இமெயில் தகவல்கள் விபரங்கள் -
அலுவலகம் மற்றும் மாதம் வாரியாக கீழே தரப்பட்டுள்ளது:
ஜூன் 2012
அனுப்பப்பட்ட இமெய்ல்கள்...
தலைமை செயலகத்திற்கு - 0
நகராட்சி நிர்வாகத்துறைக்கு - 7
மண்டல நகராட்சிகள் நிர்வாகத்துறைக்கு - 30
தனியாருக்கு - 0
பொதுமக்களுக்கு - 0
பிறருக்கு - 0
பெறப்பட்ட இமெய்ல்கள்...
தலைமை செயலகத்தில் இருந்து - 0
நகராட்சி நிர்வாகத்துறையில் இருந்து - 32
மண்டல நகராட்சிகள் நிர்வாகத்துறையில் இருந்து - 65
தனியாரிடம் இருந்து - 0
பொதுமக்களிடம் இருந்து - 0
பிறரிடம் இருந்து - 0
மே 2012
அனுப்பப்பட்ட இமெய்ல்கள்...
தலைமை செயலகத்திற்கு - 0
நகராட்சி நிர்வாகத்துறைக்கு - 11
மண்டல நகராட்சிகள் நிர்வாகத்துறைக்கு - 42
தனியாருக்கு - 0
பொதுமக்களுக்கு - 0
பிறருக்கு - 0
பெறப்பட்ட இமெய்ல்கள்...
தலைமை செயலகத்தில் இருந்து - 0
நகராட்சி நிர்வாகத்துறையில் இருந்து - 35
மண்டல நகராட்சிகள் நிர்வாகத்துறையில் இருந்து - 98
தனியாரிடம் இருந்து - 0
பொதுமக்களிடம் இருந்து - 0
பிறரிடம் இருந்து - 0
ஏப்ரல் 2012
அனுப்பப்பட்ட இமெய்ல்கள்...
தலைமை செயலகத்திற்கு - 0
நகராட்சி நிர்வாகத்துறைக்கு - 5
மண்டல நகராட்சிகள் நிர்வாகத்துறைக்கு - 23
தனியாருக்கு - 0
பொதுமக்களுக்கு - 0
பிறருக்கு - 0
பெறப்பட்ட இமெய்ல்கள்...
தலைமை செயலகத்தில் இருந்து - 0
நகராட்சி நிர்வாகத்துறையில் இருந்து - 52
மண்டல நகராட்சிகள் நிர்வாகத்துறையில் இருந்து - 47
தனியாரிடம் இருந்து - 0
பொதுமக்களிடம் இருந்து - 0
பிறரிடம் இருந்து - 0
மார்ச் 2012
அனுப்பப்பட்ட இமெய்ல்கள்...
தலைமை செயலகத்திற்கு - 0
நகராட்சி நிர்வாகத்துறையில் இருந்து - 17
மண்டல நகராட்சிகள் நிர்வாகத்துறைக்கு - 37
தனியாருக்கு - 0
பொதுமக்களுக்கு - 0
பிறருக்கு - 0
பெறப்பட்ட இமெய்ல்கள்...
தலைமை செயலகத்தில் இருந்து - 0
நகராட்சி நிர்வாகத்துறையில் இருந்து - 31
மண்டல நகராட்சிகள் நிர்வாகத்துறையில் இருந்து - 55
தனியாரிடம் இருந்து - 0
பொதுமக்களிடம் இருந்து - 0
பிறரிடம் இருந்து - 0
பிப்ரவரி 2012
அனுப்பப்பட்ட இமெய்ல்கள்...
தலைமை செயலகத்திற்கு - 0
நகராட்சி நிர்வாகத்துறைக்கு - 15
மண்டல நகராட்சிகள் நிர்வாகத்துறைக்கு - 30
தனியாருக்கு - 0
பொதுமக்களுக்கு - 0
பிறருக்கு - 0
பெறப்பட்ட இமெய்ல்கள்...
தலைமை செயலகத்தில் இருந்து - 0
நகராட்சி நிர்வாகத்துறையில் இருந்து - 23
மண்டல நகராட்சிகள் நிர்வாகத்துறையில் இருந்து - 50
தனியாரிடம் இருந்து - 0
பொதுமக்களிடம் இருந்து - 0
பிறரிடம் இருந்து - 0
மேலே தரப்பட்டுள்ள தகவல்கள் - நகராட்சி நிர்வாகத் துறையின் ஆவணங்களின் படி வழங்கப்பட்டுள்ளது. நடைமுறையில் இது தான் உண்மையா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே. உதாரணமாக - ஆவணங்கள், நகராட்சியில் 9 கணினிகள் உள்ளதாகவும், 9 (பல்வேறு வகையான) பிரிண்டர்கள் உள்ளதாகவும் தெரிவிக்கின்றன. ஆனால் - நகராட்சியில் இந்த எண்ணிக்கையில், இந்த பொருட்கள் இருப்பதாக தெரியவில்லை.
மேலும் - காயல்பட்டினம் நகராட்சியில் - 14 பிரிவுகள் கணினி மூலம் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இது உண்மை எனில் - உதாரணமாக Financial Accounting System மென்பொருள் மூலம் நகராட்சி நிதி நிலவர தகவலை - எளிதாக அதிகாரிகளும், தலைவரும், உறுப்பினர்களும் தினசரி பெறலாம். |