ஜூலை 18 அன்று - தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் சார்பில், ஹஜ் பயணிகளுக்கான புத்தகப் பயிற்சி துவக்கிவைக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அ.முஹம்மது ஜான் - இந்நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் தங்க கலியபெருமாள் இ.ஆ.ப., இந்திய ஹஜ் குழுவின் துணைத் தலைவர் அபூபக்கர், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் உறுப்பினர் - செயலர், கா. அலாவுதீன் இ.ஆ.ப. ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.
தகவல்:
இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத்துறை,
சென்னை-9.
|