புனித ரமழானை முன்னிட்டு, காயல்பட்டினத்தைச் சேர்ந்த - ஆதரவற்ற ஏழைக் குடும்பங்களுக்கு சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நற்பணி மன்றம் (RKWA) சார்பில் அத்தியாவசிய சமையல் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு, ரியாத் காயல் நல மன்றம் சார்பில், காயல்பட்டினம் நகரிலுள்ள ஆதரவற்ற, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய ஏழைக் குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருட்கள் (RFPP - Ramadan Food Packet Program) (Rs 1,06,000/- ஏறத்தாழ) வழங்கப்பட்டு உள்ளது.
நடப்பாண்டு (ஹிஜ்ரி 1433) ரமழான் மாதத்தையொட்டி 53 ஏழைக் குடும்பங்களுக்கு, அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், நெய், சீனி, மசாலா பொருட்கள் உள்ளிட்ட 28 மளிகைப் பொருட்கள் அடங்கிய - ரூபாய் இரண்டாயிரம் (Rs. 2000/-) மதிப்பிலான சமையல் பொருட்கள் அண்மையில் வழங்கி முடிக்கப்பட்டுள்ளது.
இப்பொருட்களை, பொறுப்பாளர்கள் பயனாளிகளின் இல்லம் தேடிச் சென்று வழங்கினார்கள். இவ்வகைக்கு பொருளாதார உதவி செய்த ரக்வாவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் மன்றத்தின் சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கின்றோம்.
இப்பொருட்களை, பொறுப்பாளர்கள் பயனாளிகளின் இல்லம் தேடிச் சென்று வழங்கினார்கள். இவ்வகைக்கு பொருளாதார உதவி செய்த மன்ற அங்கத்தினர்களுக்கு மன்றத்தின் சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கின்றோம்.
மேலும் இதை வெற்றிகரமாக செயல்படுத்த உதவிய எங்கள் நல மன்ற உள்ளூர் பிரதிநிகள் ஜனாப் ஏ.தர்வேஷ் முஹம்மது அவர்கள், சோனா எஸ்.எம்.எம்.டி.ஷாஹுல் ஹமீது அவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ஹாஜி எஸ்.எம்.பி.செய்யது முஹம்மது ஸாலிஹ் அவர்கள், ஹாஜி எஸ்.எம்.முஹம்மது லெப்பை அவர்கள் மற்றும் விநியோகத்தில் உதவிய ஜனாப் சம்சுதீன் ஆகியோர்களுக்கு மன்றத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கின்றோம்.
நம்மனைவர்களுக்கும் அல்லாஹ் ஈருலகிலும் நற்பாக்கியம் அளித்திடுவானாக. ஆமீன்.
இவ்வாறு, ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் சார்பாக,
ஹாஜி S.M.முஹம்மது லெப்பை. |