சீனாவின் தென்கோடியில் உள்ள நகரம் சென்ஜன். ஹாங்காங் நகரை எதிர்நோக்கி இருக்கும் சென்ஜன் ஆறுக்கு வடக்கில் உள்ளதால், இந்நகருக்கு சென்ஜன் என்ற பெயர் வந்தது. 1970கள் வரை பாவ்ன் கிராமமாக இருந்து, 1979 ஆம் ஆண்டு சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பொருளாதார கொள்கையின் பயனாக பெரும் நகரமாக இது மாறியது.
தற்போது இந்நகரில் சுமார் 100,000 முஸ்லிம்கள் வாழ்வதாக புள்ளிவிபரம் கூறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து தொழில் நிமித்தமாக குடியேறியுள்ள முஸ்லிம்களும் அடங்குவர். இந்நகரில் காயலரும் பலர் உள்ளனர்.
இந்நகரின் ஒரே பள்ளிவாசல் என கூறப்படும் ஷாங் மேலின் பள்ளியில் 22.07.2012 நடந்த இஃப்தார் நிகழ்ச்சியில் காயலர் சிலர் கலந்துக்கொண்ட காட்சி:-
தகவல் & படங்கள்:
காதர் சாமுனா,
சென்ஜன், சீனா. |