காயல்பட்டினம் தாயிம்பள்ளி ஜமாஅத்திற்குட்பட்ட மாணவ-மாணவியரின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக அப்பள்ளி ஜமாஅத் நிர்வாகத்தின் சார்பில், “தாயிம்பள்ளி ஜமாஅத் கல்வி நலச் சங்கம் (Thaimpalli Educational Welfare Association - TEWA) என்ற பெயரில் அமைப்பு துவக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
தாயிம்பள்ளி ஜமாத் - சீதக்காதி நினைவு நூலகம் சார்பில் -தாயிம்பள்ளி திக்ரி மஜ்லிஸ் கட்டிடத்தில் கடந்த 15.07.2012 ஞாயிற்றுக்கிழமை இஷா தொழுகைக்கு பின் கல்வி சம்பந்தமான நலச்சங்கம் அமைப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் ஹாஜி கே.எம். தவ்லத் அவர்கள் தலைமை தாங்கினார்கள். ஹாஜி எஸ்.டி. கமால், ஹாஜி ஏ.கே. யாஸின் மெளாலான ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஹாஜி எஸ்.மக்தும் நெய்னா (தம்மாம்) அவர்கள் கிராழத் ஓதி ஆரம்பம் செய்தார்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஹாஜி ஏ.ஆர். தாஹா, எம்.எஸ். இஸ்மாயில் (ஹாங்காங்), எஸ்.ஹெச். சீனா (மக்கா), மற்றும் பலர் அளித்த மேலான ஆலோசனையின் அடிப்படையில் வெளிநாட்டு வாழ் தாயிம்பள்ளி ஜமாத்தாரின் பொருளாதார உதவி கொண்டு தாயிம்பள்ளி ஜமாத்- கல்வி நலச்சங்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பு துவங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
இந்த நலச்சங்கத்தின் மூலம் தாயிம்பள்ளி ஜமாஅத்திற்குட்பட்ட பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை எளிய மாணவர் மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கவும், அவர்களுடைய அடிப்பiடை கல்வி தேவைகள் முதல் உயர்கல்வி வரையிலான உதவிகள் வழங்குவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்:-
தலைவர்:
ஹாஜி ஏ.லெப்பை சாகிபு (ஏ.எல்.எஸ்) அவர்கள்
துணைத் தலைவர்:
எம்.ஹெச்.சம்சுதீன் அவர்கள்
செயலாளர்:
ஹெச்.ஏ.கே.அஜ்மல் ரயிஸ் அவர்கள்
எஸ்.எம்.பி.பதுருல் ஹக் (10-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர்)
பொருளாளர்:
டி.பைஸல் பி.எஸ்ஸி. அவர்கள்
ஆலோசகர்கள்:
ஹாஜி கே.எம். தவ்லத் பி.ஏ.
ஹாஜி எம்.ஏ. சேக் அப்துல் காதர் பி.ஏ.
ஹாஜி கே.எம்.எஸ்.இஸ்மாயில் (கொமந்தார்) எம்.காம்.
ஹாஜி டாக்டர்.கிஸார் எம்.பி.பி.எஸ்., டி.சி.எச்.
ஹாஜி எஸ். ஃபாரூக் நெய்னா பி.பி.ஏ.
நிர்வாகக் குழு:
ஹாஜி ஏ.ஆர். தாஹா
ஹாஜி எம்.முஹம்மது சுல்தான் பி.எஸ்ஸி. (விஎஸ்டி)
ஹாஜி எல்.டி.செய்யது சித்தீக் (எல்.டி.எஸ்.கோல்டு ஹவுஸ்)
கே.எம். ஷேக் தாவூத் பி.எஸ்ஸி.
எஸ்.ஹெச்.நியாஸ்
எஸ்.எம்.கே. முகைதீன்
எஸ்.ஏ. முஹம்மது முகைதீன் (ஜப்பான்)
எம்.ஏ.கே. சாமு ஷிஹாபுத்தீன்
எஸ்.ஏ.கே. அப்துல் பாஸித் பி.இ.
ஏ.பி. ரஹ்மத்துல்லாஹ்
எஸ்.ஏ.கே. முஹம்மது பைசல்
தகவல் தொடர்பு:
கே.ஆர். ஹஸன் இர்ஹாத் டி.இ.சி.இ.
வெளிநாட்டு நிர்வாக அமைப்பு - தலைமை ஒருங்கிணைப்பாளர்:
எம்.எஸ்.செய்யது இஸ்மாயில் பி.எஸ்ஸி. (ஹாங்காங்)
துணை ஒருங்கிணைப்பாளர்:
சீனா எஸ்.ஹெச். மொஹ்தும் முஹம்மது பி.எஸ்ஸி. (மக்கா)
ஆலோசகர்கள் (வெளிநாடு):
ஹாஜி செய்யது இபுராகீம் (மக்கா)
ஹாஜி மூஸா சாகிபு (ஜித்தா)
மக்கா பிரதிநிதி:
ஹாஜி ஒய்.எம். முஹம்மது ஸாலிஹ் பி.எஸ்ஸி.
ஹாஜி எம்.ஹெச். அப்துல் நசீர் பி.இ.
ஜித்தா பிரதிநிதிகள்:
ஹாஜி எஸ்.ஹெச். அப்துல் காதர்
எம்.எஸ். செய்யது லெப்பை
ரியாத் பிரதிநிதி:
எம்.ஏ. அபுல் ஹசன் பி.எஸ்ஸி.
தம்மாம் பிரதிநிதி:
எஸ். மொகுதூம் நெய்னா
எம்.எஸ்.எல். கிதுரு முஹம்மது அப்பாஸ் பி.எஸ்ஸி.
ஹாங்காங் பிரதிநிதி:
கே. மூஸா பாஸில்
துபாய் பிரதிநிதி:
ஹாஜி எஸ்.ஏ.கே. முகம்மது அலி பி.எஸ்ஸி.
எம்.எம்.தஸ்தகீர் பி.ஏ.
அபுதாபி பிரதிநிதி:
ஹாஜி ஏ.ஆர். ரிபாயி சுல்தான் பி.எஸ்ஸி.
எம்.ஜே.ஹபீபுற்ரஹ்மான் எம்.ஆர்க்.
அமெரிக்க பிரதிநிதி:
ஹெச்.எம்.எஸ்.அலியார் சாகிபு பி.இ.
கே.எம். அப்பாஸ் பி.பி.ஏ.
எம்.ஐ. நூர் மொகைதீன் எம்.சி.ஏ.
எம்.என். அப்துல் காதர்
கத்தார் பிரதிநிதிகள்:
எம்.எஸ். நிலார் பி.எஸ்ஸி.
எம்.யு.எஸ். முஹம்மது ஹஸன்
இலங்கை பிரதிநிதி:
எம்.எம். முஜம்மில் ஹாஜி
எம்.எம். உவைஸ்
சிங்கப்பூர் பிரதிநிதி:
எம்.ஆர். ரஷீது ஜமான் பி.பி.ஏ.
ஓமன் பிரதிநிதி:
டாக்டர் எஸ்.ஹஸன் எம்.டி.
பஹ்ரைன் பிரதிநிதி:
பி.எம். சாகிபு
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. இந்த அமைப்பின் நிதி உதவி கல்விக்காக மட்டுமே என்று தீர்மானிக்கப்பட்டு இன்ஷா அல்லாஹ் வருகின்ற கல்வியாண்டு 2013-14 முதல் இயங்கப்படும்.
2. தாயிம்பள்ளி ஜமாத்தை சார்ந்த மாணவ மாணவிகள் மட்டுமே இத்திட்டத்தில் உதவி பெற தகுதியானவர்கள்
3. ஆரம்ப கட்டமாக நிதி ஆதாரத்தை திரட்டுமுகமாக நியமிக்கப்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் தங்கள் பகுதியில் உள்ள ஜமாத் உறுப்பினர்களுடன் இணைந்து சந்தாக்களை திரட்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
4. இது சம்பந்தமாக அனைத்து உறுப்பினர்களையும் கடிதம் மூலம் நிர்வாகிகள் தொடர்பு கொள்வார்கள்.
5. மேலதிக கல்வி உதவிக்காக மற்ற 5 காயல் நலச் சங்கங்கள்) இக்ரா போன்ற அமைப்புக்களையும் நமது தாயிம்பள்ளி (TEWA) மூலம் தொடர்பு கொண்டு வேண்டிய உதவிகளை பெறுவது எனவும்.
6. வருகின்ற கல்வியாண்டில் பொது தேர்வில் நமது ஜமாத்தை சார்ந்த சாதனைபுரியும் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ மாணவியா;களை கடந்த ஆண்டை விட சிறந்த முறையில் பாராட்டு விழா மற்றும் பரிசுத்தொகை அதிகப்படுத்தி கௌரவிப்பது என்றும்
7. அதுபோல் மார்க்க கல்வியில் ஹாபிழ் ஆலிம் பட்டம் பெறும் மாணவ மாணவியர்களை பாராட்டி பரிசளிப்பது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிகழ்வில் ஜமாஅத்தைச் சார்ந்த நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். இறுதியாக எஸ்.ஏ.முஹம்மது முகைதீன் அவர்களால் நன்றியுரை வழங்கப்பட்டு, பிரார்த்தனையோடு கூட்டம் நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
H.A.K.அஜ்மல் ரயீஸ்
படங்கள்:
K.R.ஹஸன் இர்ஷாத் |