இந்தியாவின் 13 வது ஜனாதிபதியாக பிரணாப் முக்கர்ஜி இன்று தேர்வு செய்யப்பட்டார். மேற்கு வங்காளத்தை சார்ந்த 77 வயதை நிரம்பிய முக்கர்ஜி, பிரதிபா படேலை தொடர்ந்து இந்தியாவின் ஜனாதிபதியாக ஜூலை 25 அன்று பதவியேற்க உள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களும், சட்டசபை உறுப்பினர்களும் - ஜூலை 19 அன்று பங்கேற்ற தேர்தலில் - ஆளும் காங்கிரஸ் கட்சி கூட்டணி சார்பாக பிரணாப் முக்கர்ஜீயும், எதிர்கட்சிகள் சார்பாக பீ.ஏ.சங்க்மாவும் போட்டியிட்டனர்.
இன்று (ஜூலை 22) நடந்த வாக்கு எண்ணிக்கையில் - பிரணாப் முக்கர்ஜி - 713,763 வாக்குகள் பெற்று தேர்தலில் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டார். பீ.ஏ. சங்க்மா - 315,987 வாக்குகள் பெற்றார்.
தேர்தல் முடிவுகளை முழுமையாக காண இங்கு அழுத்தவும்
புதிதாக தேர்வாகியுள்ள ஜனாதிபதியை அரசியல் தலைவர்கள் வாழ்த்தும் காட்சி ...
|