சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில், காயல்பட்டினத்திலுள்ள ஏழை - எளிய மக்களுக்காக, பயன்படுத்தப்பட்ட நல்லாடைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அம்மன்றத்தின் செயலாளர் மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில், இறையருளால் எம் மன்றத்தின் சார்பில், காயல்பட்டினத்திலுள்ள ஏழை - எளிய மக்கள் பயன்பெறும் பொருட்டு - பயன்படுத்தப்பட்ட நல்லாடைகள் கடல்வழி கார்கோ மூலம் காயல்பட்டினத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காயல்பட்டினம் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் மூலம் இவ்வுடைகள் ஏழை-எளியோருக்கு வினியோகிக்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் - தம்மிடமுள்ள பயன்படுத்தப்பட்ட நல்லாடைகளை வழங்கியுதவிய எம் மன்றத்தின் அனைத்துறுப்பினர்களையும் இந்நேரத்தில் நன்றியுடன் நினைவுகூர்கிறோம். அவர்களின் நல்லெண்ணங்கள் மற்றும் அதனடிப்படையிலான அனைத்து நற்காரியங்களையும் கருணையுள்ள அல்லாஹ் அங்கீகரித்து அருள் புரிவானாக, ஆமீன்.
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்ற செயலாளர் மொகுதூம் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 13:13/24.07.2012] |