காயல்பட்டினம் காட்டு தைக்கா தெரு - தைக்கா தெரு - சிவன்கோயில் தெரு - பாக்கர் காலனி - தருவை ஆகிய தெருக்களுக்கு நடுவில் அமைந்துள்ளது காட்டு தைக்கா அரூஸிய்யா பள்ளிவாசல்.
புதுப்பித்துக் கட்டப்பட்ட இப்பள்ளிவாசலில் 20.07.2012 வெள்ளிக்கிழமையன்று அதிகாலை ஃபஜ்ர் தொழுகையுடன் புதிய கட்டிடத்தில் வணக்க வழிபாடுகள் துவங்கின.
இப்பள்ளியின் தலைவராக ஹாஜி எஸ்.ஏ.சுல்தான், செயலாளராக ஹாஜி எஸ்.எம்.பி.மூஸா நெய்னா ஆகியோர் சேவையாற்றி வருகின்றனர். இதர பொறுப்புகளுக்கும், செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளுக்கும் விரைவில் சேவையாளர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
இப்பள்ளியின் இமாமாக - காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியின் மாணவர் ஃபஹத் என்பவரும், பிலாலாக, காயல்பட்டினத்தைச் சேர்ந்த எம்.ஏ.முத்து மீராலெப்பை என்ற முத்து லெப்பை என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.
இப்பள்ளியில், வழமை போல இவ்வாண்டும் நோன்புக் கஞ்சி தயாரிக்கப்பட்டு, ஜமாஅத்திற்குட்பட்ட குடும்பத்தினருக்கு ஊற்றுக்கஞ்சி வினியோகிக்கப்படுவதுடன், நோன்பு துறப்பு - இஃப்தார் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது. இஃப்தார் நிகழ்ச்சியில் சுமார் 50 பேர் வரை கலந்துகொள்கின்றனர். அவர்களுக்கு பேரீத்தம்பழம், கஞ்சி, வடை, தண்ணீர் ஆகியன பரிமாறப்படுகிறது. கஞ்சி தயாரிப்பு ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக எம்.ஏ.காதிர் ஒலி தலைமையில் சேவையாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
நேற்று நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியின் காட்சிகள் பின்வருமாறு:-
இப்பள்ளி குறித்த மேலதிக விபரங்களைக் காண இங்கே சொடுக்குக! |