காயல்பட்டினம் எல்.எஃப். ரோடு - ஜெய்லானி நகரிலுள்ள அன்னை கதீஜா பெண்கள் தைக்கா, கடந்த 13.11.2011 அன்று மின் கசிவின் காரணமாக தீக்கிரையானது. தென்னங்கீற்றால் அமைக்கப்பட்டிருந்த இந்த தைக்கா, தீ விபத்திற்குப் பிறகு தற்சமயம் கல் கட்டிடமாக கட்டப்பட்டு வருகிறது.
கட்டுமானப் பணிக்கான செலவினங்களுக்கு நிதியுதவி கோரி, தைக்கா நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வேண்டுகோள் அறிக்கை பின்வருமாறு:-
வல்ல அல்லாஹ்வின் நல்லருள் நம்அனைவர் மீதும் நிலவுமாக.
நம் உயிரினும் மேலான ரஸுலேகரிம் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் அடிச்சுவட்டில் தடம்பதித்த அனைவர் மீதும் இறையருள் நிறையுமாக ஆமீன்.
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களுக்கு ஒரு கனிவான வேண்டுகோள்.
அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
வரலாற்றுச் சிறப்புமிக்க நமது காயல்மாநகரின் மரபின்படி பெண்களுக்கான தொழுகை இடம் (தைக்கா) அனைத்துப் பகுதிகளிலும் அமைந்திருப்பது நமதூரின் தனிச்சிறப்புக்குரியதாகும். பன்னெடுங்காலமாக நிலவிவரும் இவ்வுயரிய வழமையின் அடிப்படையில், காயல்பட்டணம் எல்.எஃப். ரோடு ஜெய்லானி நகரில் அன்னை கதீஜா பெண்கள் தைக்கா சென்ற 4 ஆண்டு காலமாக வக்பு செய்யப்பட்ட இடத்தில் சிறப்போடு இயங்கி வந்தது.
ஓலைக்கீற்றால் வேயப்பட்ட இத்தைக்கா எதிர்பாராதவிதமாக மின் கசிவினால் சென்ற 13.11.2011 இரவு தீக்கிரையாகி எரிந்து முழுமையாக அழிந்துவிட்டது.
இந்நிலையில் இப்பகுதியில் வாழக்கூடிய பெண்கள் ஒன்றுகூடி தொழுவதற்கும், பெண்கள் மதரஸா உள்ளிட்ட மற்றுமுள்ள மார்க்க நடைமுறைகளை கூட்டாக செயல்படுத்தவும் இயலாத சூழ்நிலை தற்போது நிலவி வருகிறது. மேலும் குறிப்பாக தராவீஹ் தொழுகை மேற்கொள்ள வேண்டிய புனித ரமழான் மாதத்தையும் அடைந்துவிட்டோம்.
முக்கியத்துவம் வாய்ந்த மேற்கண்ட அவசியத்தையும், அவசரத்தையும் கருத்திற்கொண்டு, 20.04.2012 வெள்ளிக்கிழமை மாலை, தைக்கா இருந்த இடத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு, கல்லால் (கான்க்ரீட்) ஆன கட்டிடம் கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது.
இறையருளையும், தங்களைப் போன்றவர்களின் பொருள் உதவியையும், பெரும் ஒத்துழைப்பையும் நம்பி துவங்கப்பட்டுள்ள கட்டிடப்பணி விரைவில் நிறைவடைய பெருமளவில் நிதி தேவைப்படுகிறது. சுமார் 54’ x 40’ = 2160 சதுரஅடி பரப்பில் தைக்கா கட்டிடமும், அதன் சுற்றுச்சுவரும் (காம்பவுண்ட் சுவர்) கழிப்பறை வசதியுடன் கட்டி முடிக்க சுமார் ரூபாய் பதினாறு லட்சம் (ரூ.16,00,000/-) வரை நிதி தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
“சதக்கத்துன் ஜாரியா” எனும் நீடித்து நிலையெறும் கொடையாகக் கருதி இப்பணிக்கு தயவுகூர்ந்து, தாராள உள்ளத்துடன் உதவுமாறு அன்புடன் வேண்டுகிறோம். இறைஇல்லப் பணிக்காக உதவிட முன்வரும் நம் அனைவர் மீதும் இறையுதவி நிறையுமாக. ஆமீன். வஸ்ஸலாம்.
நிதியுதவி செய்ய விரும்புவோர்,
ICICI Bank - Kayalpatnam
A/c No. 615301502147
Joint A/c holders :
PALAYAM S.A. MUSTAFA (+91 98421 88067)
M.M.S. MOHAMED MOHIDEEN (BABU) (+91 95243 07365)
என்ற விபரப்படியான வங்கிக் கணக்கிற்கு உங்கள் பொருளாதார ஒத்துழைப்பை வழங்கியுதவுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
தங்கள் உதவியை நாடும்,
அன்னை கதீஜா பெண்கள் தைக்கா
கட்டிட குழுவினர் மற்றும் எல்.எஃப்.ரோடு குடியிருப்பு மக்கள்.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
அன்னை கதீஜா பெண்கள் தைக்கா நிர்வாகம் சார்பில்,
ஹாஜி பாளையம் S.A.அஹ்மத் முஸ்தஃபா,
எல்.எஃப்.ரோடு, காயல்பட்டினம். |