புனித ரமழான் நோன்பு துவங்கியிருப்பதை முன்னிட்டு, காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் 21.07.2012 சனிக்கிழமையன்று சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கணிப்பொறியியல் மூன்றாமாண்டு மாணவி எம்.ஆர்.நஃபீஸத் தாஹிரா கிராஅத் ஒதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். கணிப்பொறியியல் மூன்றாமாண்டு மாணவி எஸ்.ஹவ்வா நஜாஹா நவ்ஷீன் வரவேற்புரையாற்றினார். தகவல் தொழில் நுட்பத்துறை மூன்றாமாண்டு மாணவி கே.ஆயிஷா ஸமீனா - ரமழான் நோன்பை வரவேற்று கவிதை வாசித்தார்.
அதனைத் தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட காயல்பட்டினம் முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் பேராசிரியை - “அஃப்ஸலுல் உலமா” எம்.ஐ.கதீஜத்துல் குப்ரா முஅஸ்கரிய்யா - “நோன்பின் மகிமை” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
கல்லூரியின் வணிகவியல் துறை மூன்றாமாண்டு மாணவி என்.எஸ்.செய்யித் நஃபீஸா நன்றி கூற, அரபு மொழித்துறை தலைவி எஸ்.ஏ.கே.முத்து மொகுதூம் ஃபாத்திமா துஆ ஒதி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் நிறுவனர் தலைவர் ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான், அவரது துணைவியார் ஞானி வஜீஹா பேகம், வாவு எஸ்.ஏ.ஆர். கல்வி அறக்கட்டளை உறுப்பினர்கள், கல்லூரி நிர்வாக இயக்குநர் முனைவர் மெர்ஸி ஹென்றி, தமிழ்த்துறைத் தலைவர் இரா. அருணா ஜோதி மற்றும் அனைத்து முஸ்லிம் பேராசிரியையரும், கல்லூரியின் முஸ்லிம் மாணவியரும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கல்லூரியின் அரபி மொழித்துறை தலைவி எஸ்.ஏ.கே.முத்து மொகுதூம் ஃபாத்திமா ஏற்பாடு செய்திருந்தார். |