காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெருவின் தென்முனையில் அமைந்துள்ளது ஹாஃபிழ் அமீர் அப்பா பள்ளிவாசல். இப்பள்ளி ஜமாஅத் நெசவு ஜமாஅத் என்றும் அழைக்கப்படுகிறது.
இப்பள்ளியில், ஹாஜி ஏ.எம்.எஸ்.அஹ்மத் முஹ்யித்தீன் என்ற கோப்பி ஹாஜி தலைவராக சேவையாற்றி வருகிறார். அவர் தலைமையின் கீழ் பள்ளியின் அங்கத்தினர் நிர்வாகப் பணிகளைச் செய்து வருகின்றனர்.
பள்ளியின் ஐவேளைத் தொழுகைக்கான இமாமாக - காயல்பட்டினத்தைச் சேர்ந்த மவ்லவீ ஏ.அபுல்ஹஸன் ஷாதுலீ என்பவரும், பிலாலாக - படுக்கப்பத்து என்ற ஊரைச் சேர்ந்த அப்துஸ்ஸமத் என்பவர் பிலாலாகவும் பணியாற்றி வருகின்றனர். நடப்பாண்டு ரமழான் தராவீஹ் - சிறப்புத் தொழுகையை, காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெருவைச் சேர்ந்த ஹாஃபிழ் நியாஸ் வழிநடத்துகிறார்.
நடப்பாண்டு கஞ்சி தயாரிப்பு மற்றும் இதர ரமழான் தொடர்பான ஏற்பாடுகளனைத்தையும் செய்வதற்காக தனிக்குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. ஹாஜி எம்.கே.எல்.ஷாஹுல் ஹமீத் அதன் தலைவராகவும், ஹாஜி எஸ்.ஏ.ஷாஹுல் ஹமீத் துணைத்தலைவராகவும், ஹாஜி பி.எம்.ஏ.ஜின்னா - அப்பாஸ் ஷாஹுல் ஹமீத் ஆகியோர் செயலாளர்களாகவும், ஹாஜி ஏ.எம்.எஸ்.அஹ்மத் முஹ்யித்தீன் என்ற கோப்பி ஹாஜி பொருளாளராகவும், எஸ்.ஏ.அமீர் தலைமையிலான ஜமாஅத்தினர் கமிட்டி உறுப்பினர்களாகவும் உள்ளனர்.
ரமழான் தராவீஹ் சிறப்புத் தொழுகைக்கு இமாம் நியமனம், ரமழான் மாதம் முழுக்க தினந்தோறும் கஞ்சி தயாரிப்பு, ஊற்றுக் கஞ்சி, இஃப்தார் - நோன்பு துறப்பு ஏற்பாடுகள் ஆகியன இக்குழுவின் பொறுப்பிலுள்ள பணிகளாகும்.
நடப்பாண்டு கறி கஞ்சிக்கு நாளொன்றுக்கு ரூபாய் 4,000 தொகையும், காய்கறி கஞ்சிக்கு ரூபாய் 3,000 தொகையும், வெண்கஞ்சிக்கு ரூபாய் 2,500 தொகையும் செலவிடப்படுகிறது.
மாலை நேரத்தில் வினியோகிக்கப்படும் ஊற்றுக்கஞ்சியை இந்த ஜமாஅத் மற்றும் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த சுமார் 200 குடும்பத்தினர் பெற்றுச் செல்கின்றனர். இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் தினமும் சுமார் 60 முதல் 100 பேர் வரை பங்கேற்கின்றனர்.
26.07.2012 அன்று (நேற்று) நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சியின்போது பதிவுசெய்யப்பட்ட காட்சிகள் பின்வருமாறு:-
இப்பள்ளி குறித்த மேலதிக விபரங்களைக் காண இங்கே சொடுக்குக! |