காயல்பட்டினம் 15ஆவது வார்டுக்குட்பட்ட சீதக்காதி நகரில், பள்ளிவாசல் - மத்ரஸா அமைப்பதற்கு நிதியுதவி செய்யுமாறு, சீதக்காதி நகர் நலச்சங்கம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...
பேரன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
இம்மடக்கோலை தங்களை நற்சுகத்தோடும் உயர்ந்த இஸ்லாமிய உணர்வுகளோடும் சந்திக்கட்டுமாக. முக்கியம் நமதூரின் பெருகிவரும் ஜனத்தொகையால் ஏற்படும் இடநெருக்கடியை நிவர்த்தி செய்யும் வண்ணம் பல்வேறு தெருக்களிலிருந்து நமது சீதக்காதி நகர் பகுதிக்கு கனிசமானோர் இடம் பெயர்ந்து குடியமர்ந்து வருவதை தாங்களும் அறிந்திருப்பீர்கள்.
இவ்வாறு புதிதாக வீடுகளைகட்டி இப்பகுதியில் வசித்துவரும் நாங்கள் சீதக்காதி நகர் நலச்சங்கம் என்ற பெயரில் அரசு பதிவு பெற்ற ஒரு அமைப்பை நிறுவி பல்வேறு மார்க்க மற்றும் சமூகநலத் தொண்டுகளை சீதக்காதி நகர் மக்களுக்காக செய்து வருகிறோம். குறிப்பாக இப்பகுதியைச் சார்ந்த நமதூர் சிறுவர் சிறுமியர் மார்க்கக் கல்வி பெறுவதற்காக எமது நலச்சங்கங்கத்தின் பொறுப்பில் மதரஸா ஒன்று நிறுவப்பட்டு சற்றொப்ப 2 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது – அல்ஹம்துலில்லாஹ்.
நமது அறக்கட்டளையின் முக்கிய பணிகளாவன,
எமது பகுதியைச் சார்ந்த இளஞ்சிறார்களுக்கு மார்க்கக் கல்வியை போதிக்கும் வண்ணம் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமையன்று நமது மத்ரஸா வளாகத்தில் தீனியாத் வகுப்புகள் நடைபெறுகின்றன. இதற்காக சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு குர்ஆன், ஹதீஸ், துஆக்கள், இஸ்லாமிய வரலாறு போன்ற மார்க்க சம்பந்தமான பாடங்கள் நடத்தப்படுகின்றன.
தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் நமது மதரஸா வளாகத்தில் குர்ஆன் மக்தபுகள் எனும் குர்ஆன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் ஏராளமான மாணவ மாணவியர்கள் குர்ஆனை சிறந்த முறையில் கற்று வருகின்றனர்.
வருகின்ற கல்வியாண்டிலிருந்து ஏழை எளிய மாணவ மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளன.
தினமும் ஐந்து வேளை கடமையான தொழுகைகளை ஜமாஅத்தாக தொழுவதற்கு மத்ரஸாவிலேயே தற்காலிக இடம் ஒதுக்கப்பட்டு தினமும் தொழுகைகள் நடைபெற்று வருகின்றன.
ரமழான் மாதத்தில் இரவுத் தொழுகைகளை பெண்களும் நிறைவேற்ற தனி இடவசதி செய்யப்படுகிறது. மேலும் நோன்பாளிகள் நோன்பு திறப்பதற்காகவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
வட்டியில்லா அழகிய கடன் வழங்குவது, மாதம் ஒரு நாள் சிறப்பு பேச்சாளர்களை அழைத்து குர்ஆன் விளக்கவுரை நடத்துவது, தர்பிய்யா தஜ்கிய்யா வகுப்புகள் என்று பல்வேறு பணிகளை நம் ஜமாஅத் மூலம் நடத்துவதற்கு நாம் இயன்ற அளவிற்கு முயன்று வருகிறோம். இவ்வாறான மார்க்க மற்றும் சமூகநலப் பணிகளை மிகவும் நெருக்கடிக்கு மத்தியில்தான் நாம் செய்து வருகிறோம்.
எங்கள் பகுதியின் அவசிய தேவையான ஐவேளை தொழுகைக்கான பள்ளிவாயிலுக்காக வேண்டி சீதக்காதி நகர் நலச்சங்கத்தின் பொறுப்பில் இருக்கும் 1400 சதுரஅடிகள் கொண்ட இம்மதரஸா இடத்தில் பள்ளிவாயிலோடு கூடிய குர்ஆன் மதரஸா மற்றும் மார்க்க போதனைகள் செய்யும் வகையில் எம் மதரஸாவை புனர் நிர்மானம் செய்வது என்று நமது நலச்சங்கத்தின் மூலம் செயற்குழுகூடி தீர்மானித்துள்ளளோம். அத்தோடு சீதக்காதி நகர் பகுதி மக்களின் வேண்டுகோள்களுக்கு இணங்க இப்பகுதி மக்களுக்கான கபுறுஸ்தானும் நிறுவ தீர்மானித்துள்ளோம் - அல்ஹம்துலில்லாஹ்.
மேற்படி நிலத்தில் 1400 சதுர அடியில் கீழ்தளமும், அதே அளவிற்கு மேல்தளமும் கூடிய சுமார் 2800 சதுர அடியில் இன்ஷா அல்லாஹ் இப்புதிய பள்ளிவாயில் அமையவிருக்கிறது என்பதை அகமகிழ அறியத்தருகிறோம் - அல்ஹம்துலில்லாஹ்.
2800 சதுர அடியில் இப்புதிய பள்ளிவாயில் கட்டி முடிக்க சுமார் 35,00000 (முப்பத்து ஐந்து லட்சம்) என்றும், கபுருஸ்தானுக்காக தனியாக சுமார் 10 செண்டு அளவுள்ள காலி மனை நிலம் சுமார் 15,00000 (பதினைந்து லட்சம்) இந்திய ரூபாய் என்று அளவிடப்பட்டு ஆக மொத்தம் 50,00000 (ஐம்பது லட்சம்) இந்திய ரூபாய் செலவாகும் என்று தற்போது மதிப்பிடப்பட்டுள்ளது.
யார் அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி பள்ளிவாயில் ஒன்றை கட்டுகிறாரோ அவருக்கு அது போன்ற ஒன்றை சுவர்க்கத்தில் அல்லாஹ் கட்டுகிறான் (புகாரி) என்ற நபிமொழிக்கு இணங்க, இந்த இறைபணியில் தாங்களும் பங்குகொண்டு தாராளமாக வாரி வழங்கி அல்லாஹ்வின் நற்பேற்றை பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
வல்ல அல்லாஹ் உங்களுக்கு அதிகமான பரக்கத்தை அளித்து உங்களின் துஆக்களை நிறைவேற்றி அருள் பாளிப்பானாக!
கீழ்க்காணும் வங்கி முகவரியில் தங்கள் நன்கொடைகளை செலுத்துமாறு வேண்டுகிறோம்
Please send your Check / Draft to the following Bank A/c
SEETHAKKATHI NAGAR WELFARE ASSOCIATION
A/C/ : 3188450931
CENTRAL BANK
KAYALPATNAM BRANCH
CONTACT : +91 9965264146 , +91 9789718176 , +91 9952644342
இப்படிக்கு
நிர்வாகம்
சீதக்காதி நகர் நலச்சங்கம்
அரசு பதிவு எண் : 124/2011
காயல்பட்டினம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.N.அஹ்மத் ஸாஹிப் மூலமாக,
சீதக்காதி நகர் நலச்சங்கம் சார்பில்,
ஜமால்,
சீதக்காதி நகர், காயல்பட்டினம். |