தமிழக அரசு - மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு உள்ளாட்சி மன்றத்திற்கும், அதன் தகுதி - மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் - ஒவ்வொரு
மாதமும் மானியம் வழங்கிவருகிறது. இம்மானியமே - உள்ளாட்சி மன்றங்களின் வருவாயில் பெரும் பங்கினை வகிக்கிறது.
இவ்வாண்டு ஜூன் மாதம் வழங்கப்பட்ட மானியத் தொகை விபரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பிடித்தங்கள் போக ஜூன் மாத வகைக்கு - அரசு சுமார் 18 லட்சத்து, 30 ஆயிரம் ரூபாய் காயல்பட்டினம் நகராட்சிக்கு வழங்கியுள்ளது. நடப்பாண்டின் (2012 - 2013) மூன்று மாதாங்களில் - தமிழக அரசிடம் இருந்து மானியமாக, காயல்பட்டினம் நகராட்சி - ரூபாய் 58,76,118 பெற்றுள்ளது.
ஜூன் 2012
அரசு உதவி தொகை (A) - 26,13,231
பிடித்தங்கள்:
(a) Pension Demand (June)- 1,63,792
(b) TUFIDCO (Special Road Works) - 18,645
Repayment of Water Supply Loan to HUDCO
(c) Principal - 3,05,000
(d) Interest - 2,94,000
பிடித்தம் (Deductions) (a+b+c+d = B) - 7,82,437
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 18,30,794
ஏப்ரல் 2012 - மே 2012
அரசு உதவி தொகை (A) - 52,26,462
பிடித்தங்கள்:
(a) Pension Demand (April)- 1,58,943
(b) Pension Demand (May)- 1,84,906
(c) TUFIDCO (Special Road Works) - 37,289
Repayment of Water Supply Loan to HUDCO
(d) Principal - 4,72,000
(e) Interest - 3,28,000
பிடித்தம் (Deductions) (a+b+c+d+e = B) - 11,81,138
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 40,45,324
கடந்த நிதியாண்டில் (2011 - 2012) - மார்ச் 2012 முடிய - காயல்பட்டினம் நகராட்சிக்கு, தமிழக அரசு மூலமாக 3 கோடியே , 27 ஆயிரத்து 208 ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பென்ஷன் வகை, சிறப்பு சாலை அமைப்பு திட்டங்களுக்காக TUFIDCO நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட கடன், குடிநீர் விநியோக கடன் வகைக்கு HUDCO நிறுவனத்திற்கு செலுத்தப்படும் தொகை - ஆகிய வகைக்களுக்கு 58 லட்சத்து , 67 ஆயிரத்து 380 ரூபாய் பிடித்தம் (deductions) போக மீதி தொகை மொத்தம் 2 கோடியே , 41 லட்சத்து , 59 ஆயிரத்து 828 ரூபாய் - நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2011 - மார்ச் 2012
அரசு உதவி தொகை (A) - 3,00,27,208
பிடித்தம் (Deductions) (B) - 58,67,380
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 2,41,59,828
தகவல்:
நகராட்சி நிர்வாகத்துறை, சென்னை. |