காயல்பட்டினம் சொளுக்கார் தெரு - மரைக்கார் பள்ளித் தெருவை அணைத்தாற்போல் அத்தெருக்களின் தென்முனையில் அமைந்துள்ளது மஸ்ஜிதுல் ஆமிர் - மரைக்கார் பள்ளிவாசல்.
ஹாஜி எஸ்.மூஸா இப்பள்ளியின் தலைவராகவும், ஹாஃபிழ் எஸ்.எம்.முஹ்யித்தீன் துணைத்தலைவராகவும் சேவையாற்றி வருகின்றனர்.
பள்ளியின் இமாமாக காயல்பட்டினம் சொளுக்கார் தெருவைச் சேர்ந்த ஹாஜி டி.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத் என்பவரும், பிலாலாக மேலப்பாளையத்தைச் சேர்ந்த ஒருவரும் பணியாற்றி வருகின்றனர்.
காயல்பட்டினம் அப்பா பள்ளித் தெரு - மரைக்கார் பள்ளித் தெருவை அணைத்தாற்போல், அத்தெருக்களின் தென்முனையில் அமைந்துள்ளது அப்பா பள்ளிவாசல்.
ஹாஜி எம்.எஸ்.கே.எஸ்.மரைக்கார் என்ற சி.எம்.கே. இப்பள்ளியின் தலைவராகவும், ஹாஜி ஏ.எம்.இஸ்மாஈல் நஜீப் அதன் துணைத்தலைவராகவும் சேவையாற்றி வருகின்றனர்.
ஹாஃபிழ் டி.எச்.எம்.ரஹ்மத்துல்லாஹ் பக்ரீ இப்பள்ளியின் இமாமாகவும், இஸ்லாம் மார்க்கத்தைப் புதிதாக தன் வாழ்வியலாக்கிக் கொண்ட - காயல்பட்டினம் தஃவா சென்டரில் பயின்ற ஊட்டியைச் சேர்ந்த காலித் என்பவர் பிலாலாகவும் பணியாற்றி வருகின்றனர்.
இப்பள்ளியின் ரமழான் இரவுத் தொழுகையை காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் திருக்குர்ஆன் மனனப் பிரிவு (ஹிஃப்ழு மத்ரஸா) மாணவர்கள் தினமும் வழிநடத்துகின்றனர்.
மரைக்கார் பள்ளி - அப்பா பள்ளி ஆகிய இவ்விரு பள்ளிகளிலும், பல ஆண்டுகளாக தனித்தனியே நோன்புக் கஞ்சி ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இவ்விரு ஜமாஅத்தினரும் ஒரே எல்லைக்குள் உள்ளவர்கள் என்பதால் இருவேறு இடங்களில் தனித்தனியே செலவு செய்வதைத் தவிர்த்து, ரெட் ஸ்டார் சங்கத்தில், மரைக்கார் பள்ளி - அப்பா பள்ளி கூட்டு கஞ்சி கமிட்டி என்ற பெயரில் இரு ஜமஅத்தும் இணைந்து தற்சமயம் நோன்புக் கஞ்சி ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
அந்த அடிப்படையில், நடப்பாண்டு கஞ்சி கமிட்டியின் தலைவராக ஹாஜி எல்.எஸ்.ஸாதிக், துணைத்தலைவராக ஹாஜி வா.செ.சேக் அப்துல் காதிர், பொருளாளராக எம்.ஏ.கே.ஜவஹர் இஸ்மாஈல், செயலாளர்களாக எஸ்.அப்துல் வாஹித், ஷெய்க் அலீ ஆகியோர் பொறுப்பேற்று, கஞ்சி தயாரிப்பு மற்றும் இஃப்தார் - நோன்பு துறப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
நடப்பாண்டில், நாளொன்றுக்கு கறி கஞ்சிக்கு ரூபாய் 7,000 தொகையும், காய்கறி கஞ்சிக்கு ரூபாய் 5,000 தொகையும், வெண்கஞ்சிக்கு ரூபாய் 3,500 தொகையும் உத்தேசமாக செலவழிக்கப்படுகிறது.
மாலையில் வினியோகிக்கப்படும் ஊற்றுக் கஞ்சியை இவ்விரு ஜமாஅத்திற்கும் உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 150 குடும்பத்தினர் பெற்றுச் செல்கின்றனர்.
இவ்விரு ஜமாஅத்துகளின் சார்பில் ரெட் ஸ்டார் சங்கத்தில் நடைபெறும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் நேற்று பதிவு செய்யப்பட்ட காட்சிகள் பின்வருமாறு:-
களத்தொகுப்பில் உதவி:
கவிமகன் காதர். |