கத்தர் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் மாதம் 03ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வுகளில் பங்கேற்க அழைப்பு விடுத்து, அம்மன்றத்தின் செயலாளர் செய்யித் முஹ்யித்தீன் இன்றுவெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்பின் கத்தர் காயல் நல மன்ற உறுப்பினர்கள் மற்றும் கத்தர்வாழ் காயலர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹ்...
இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் ஆகஸ்ட் மாம் 03ஆம் தேதியன்று மாலை 04.30 மணிக்கு, நமது கத்தர் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் தோஹாவிலுள்ள அலிஷான் ரெஸ்டாரென்ட்டில் நடைபெறவுள்ளது. கூட்டம் நிறைவுற்ற பின்னர், இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, தாங்களனைவரும் இச்செய்தியையே அழைப்பாகக் கொண்டு, அனைத்து நிகழ்வுகளிலும் தவறாமல் பங்கேற்க வருமாறும், இத்தகவலை தங்களுக்கு அறிமுகமான நம் மன்ற உறுப்பினர்கள் மற்றும் காயலர்களுக்குத் தெரிவித்து, அவர்களையும் பங்கேற்கச் செய்திடுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு, கத்தர் காயல் நல மன்ற செயலாளர் செய்யித் முஹ்யித்தீன் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்,
உள்ளூர் பிரதிநிதி,
கத்தர் காயல் நல மன்றம். |