டில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் (12622) ரெயிலில் நடந்த தீ விபத்தில் 32 பேர் மரணமுற்றனர். 27 பேர் காயமுற்றனர். விபத்துக்குள்ளான அந்த வண்டியின் S11 பெட்டியில் பயணம் செய்தவர்களில் - காயலர் வி.எஸ்.எம்.டி.முஹ்யித்தீன் என்பவரும் (வயது 40) ஒருவர்.
இவர் உட்பட பதினேழு பயணியரின் நிலை குறித்து தகவல்கள் தெரிவிக்க இயலவில்லை என தென்-மத்திய ரயில்வே இன்று செய்தி குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.
ஆந்திரா மாநிலம் நெல்லூரில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள இறந்தவர்களின் உடலில் இவர்களின் உடல் உள்ளதா என அடையாள காண்பிக்க - அவர்களின் உறவினர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதுவரை விபரம் அறியமுடியாத காயலர் வி.எஸ்.எம்.டி.முஹ்யித்தீனின் உறவினர்கள் நெல்லூர் சென்றுள்ளதாக அறியப்படுகிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross