காயல்பட்டினம் கே.டி.எம். தெருவின் தென் முனையில் அமைந்துள்ளது மஸ்ஜிதுத் தாயிம் எனும் தாயிம் பள்ளிவாசல்.
இப்பள்ளிவாசலில், ஹாஜி எஸ்.டி.வெள்ளைத் தம்பி தலைவராகவும், ஹாஜி எம்.எம்.அஹ்மத் செயலாளராகவும், ஹாஜி கே.எம்.தவ்லத் பொருளாளராகவும் சேவையாற்றி வருகின்றனர்.
இப்பள்ளியில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த எஸ்.எல்.அஹ்மத் காஸிம் இமாமாகவும், ஷம்ஸ் அலியார் பிலாலாகவும் பணியாற்றி வருகின்றனர்.
நடப்பாண்டு ரமழான் தராவீஹ் - சிறப்புத் தொழுகையை, ஹாஃபிழ் ஷக்கூர் துணையுடன் ஹாஃபிழ் ஏ.எம்.ஷேக் தாவூத் வழிநடத்தி வருகிறார்.
நடப்பாண்டு நோன்புக் கஞ்சி உள்ளிட்ட ரமழான் சிறப்பு ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக, ஷம்சுத்தீன் தலைமையில் கஞ்சி கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
நாளொன்றுக்கு கிடா கறி கஞ்சிக்கு ரூபாய் 8,000 தொகையும், கோழி கறி கஞ்சிக்கு ரூபாய் 7,500 தொகையும், காய்கறி கஞ்சிக்கு ரூபாய் 6,000 தொகையும், வெண்கஞ்சிக்கு ரூபாய் 3,500 தொகையும் உத்தேசமாக செலவிடப்படுகிறது.
தினமும் மாலையில் வினியோகிக்கப்படும் ஊற்றுக் கஞ்சியை இந்த மஹல்லா ஜமாஅத்தைச் சேர்ந்த சுமார் 200 குடும்பத்தினர் பெற்றுச் செல்கின்றனர்.
இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் தினமும் 70 முதல் 100 பேர் வரை பங்கேற்கின்றனர். நேற்று மாலையில் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியின்போது பதிவு செய்யப்பட்ட காட்சிகள் பின்வருமாறு:-
இப்பள்ளி குறித்த மேலதிக விபரங்களை செய்தி எண் 3529, செய்தி எண் 4575 ஆகிய செய்திகளில் காணலாம். |