சென்னையிலுள்ள இ.டி.ஏ. மெல்கோ நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் சார்பில், 02.08.2012 வியாழக்கிழமையன்று (நேற்று) மாலையில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அந்நிறுவனததின் பணியாளர்கள் மற்றும் காயல்பட்டினத்தைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர். அவர்களுக்கு, நோன்புக் கஞ்சி, பேரீத்தம்பழம், தண்ணீர் பாக்கெட், சூப், பழக்கூழ், குளிர்பானம், நால்வகை வடை ஆகிய உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன.
இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடுகளை, அபூ தாஹிர், மன்ஸூர் அலீ, சமீஉல்லாஹ், அப்துல் காதிர் ஆகியோர் செய்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
A.H.M.முக்தார் B.Com. |