தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்த்தின் காயல்பட்டினம் நகர கிளைக்குச் சொந்தமாக மருத்துவ ஊர்தி - ஆம்புலன்ஸ் வாகனம் உள்ளது. காயல்பட்டினம் மற்றும் சுற்றுப்புறத்திலுள்ள பொதுமக்களுக்கு, ஜாதி - மத - இன - கொள்கை வேறுபாடுகளின்றி அழைத்தவுடன் இருப்பிடம் சென்று தேவையான பாதுகாப்பு உதவிகள் இந்த வாகனத்தின் துணையுடன் செய்யப்பட்டு வருகிறது.
சாதாரணமாக ஆயிரக்கணக்கில் வாடகை கேட்கப்படும் பொதுவான ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கிடையில் - எரிபொருளுக்கும், ஓட்டுநர் கைச்செலவிற்கும் மட்டுமே பொதுமக்களிடமிருந்து கட்டணம் பெறப்படுகிறது. ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைப்பவர் ஏழையாக இருப்பின், இக்கட்டணத்திலும் சலுகை காட்டப்பட்டு வருகிறது.
இந்த ஆம்புலன்ஸ் - மருத்துவ வாகனத்தின் பராமரிப்பிற்காக சக்திக்கு அதிகமான செலவினங்களைச் சந்திப்பதாகவும், பொதுமக்கள் இவ்வகைக்கு நிதியுதவி செய்திடுமாறும் தமுமுக காயல்பட்டினம் நகர கிளை சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. கோரிக்கை வாசகங்கள் அடங்கிய அறிக்கை பின்வருமாறு:-
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross