காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அமைப்பின் ஓராண்டு நிறைவையொட்டி, அதன் துணைக்குழுக் கூட்டம், இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இறையருளால் காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையத்தின் துணைக்குழுக் கூட்டம், 05.08.2012 அன்று, அமைப்பின் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
துவக்கமாக, இறைமறையின் திருவசனங்களை ஜெ.எஸ்.மீரா சாஹிப் தமிழ் மொழிபெயர்ப்புடன் ஓதினார். கூட்ட நிகழ்வுகளை சகோதரர் ஷமீமுல் இஸ்லாம் நெறிப்படுத்த, சகோதரர் குளம் முஹம்மது தம்பி வரவேற்புரையாற்றினர்.
காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையத்தின் ஓராண்டு செயல்பாடுகள் மற்றும் வருங்கால பணிகள் குறித்து சகோதரர் முஹம்மது முக்தார் ஆற்றிய உரையைத் தொடர்ந்து, கல்வி - வேலைவாய்ப்பு - மருத்துவத் துறைகளில் அமைப்பின் மூலம் கடந்த ஓராண்டாக ஆற்றப்பட்ட சேவைகள் குறித்து - முறையாக, சகோதரர் முஹம்மது ஸாலிஹ், சகோதரர் பாளையம் முஹம்மது சுலைமான் மற்றும் மருத்துவர் காணி ஷேக் ஆகியோர் உரையாற்றினர்.
தொடர்ந்து, காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையத்தின் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மக்கள் தொடர்பு அதிகாரியின் அவசியத்தை கருத்திற்கொண்டு - நமதுரைச் சார்ந்த சகோதரர் முஹம்மது ஹனீபா நியமனம் கூட்டத்தில் அங்கிகரிக்கப்பட்டு, அவரது தன்னிலை அறிமுகமும் நடைபெற்றது.
தொடர்ந்து பல அம்சங்கள் குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது. நிறைவில், எதிர்வரும் 01.09.2012 அன்று காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையத்தின் ஆண்டிறுதி பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவது மற்றும் எதிர்வரும் 09.09.2012 அன்று உறுப்பினர்கள் ஈத் மிலன் சந்திப்பு நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இறுதியாக, காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையத்தின் வேலைவாய்ப்புக் குழு உறுப்பினர் சகோதரர் வி.எம்.ஐ.எஸ்.முஹம்மது முஹிதீன் நன்றி கூற, நோன்பு துறப்பு - இஃப்தார் நிகழ்வுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது - அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு, காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
A.H.M.முக்தார் B.Com. |